உயிரிழப்பு குறைவு
'ஆன்டிகோகுலன்ட்' அல்லது 'பிளட் தின்னர்' தெரபி சிகிச்சை, கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் 50 சதவீத உயிரிழப்பு, 43 சதவீதம் மருத்துவமனையில் சேர்ப்பதை குறைக்கிறது என அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2020 மார்ச் 4 - ஆக. 27 வரை 72 கிளினிக்குகளில் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 6195 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கொரோனாவுக்கு முன் 90 நாள் இந்த தெரபி எடுத்தவர்களுக்கு உயிரிழப்பு அபாயத்தை 50 சதவீதம் தடுக்கிறது என கண்டறியப்பட்டது. பிளட் தின்னர் தெரபி என்பது ரத்த உறைவை தடுக்கும் சிகிச்சை முறை.
தகவல் சுரங்கம்
நோபல் இல்லா ஆண்டு
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. முதல் உலகப்போர் (1914 - 1918), இரண்டாம் உலகப்போர் (1939 - 1945) உட்பட சில காரணங்களால் சில ஆண்டுகளில் விருது வழங்கப்படவில்லை. இதுவரை மொத்தம் 49 முறை (அனைத்து பிரிவும் சேர்த்து) விருது வழங்கவில்லை. இதில் அதிகபட்சமாக அமைதி பிரிவுக்கு 19 முறையும், அடுத்ததாக மருத்துவ பிரிவுக்கு 9 முறை, வேதியியல் 8, இலக்கியம் 7, இயற்பியல் 6 முறை வழங்கப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE