சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

இந்த மாதம் அஜீரண உணவுகளை தவிர்த்தல் நல்லது

Added : அக் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆயுர்வேத மருத்துவர் மரு.ரா.பாலமுருகன்: மனிதனுக்கு மனிதன் உண்ணும் அளவு, காலம், மனதில் ஏற்படும் எண்ணம், சுகம் மற்றும் துக்கம் ஆகியவை வேறுபடும். ஆனால், அனைவருக்கும் பொதுவான காலம் என்ற பருவநிலை மாற்றமடையும் போது, நம் உணவிலும், நடைமுறை வாழ்க்கையிலும் சில மாற்றங்களை மேற்கொண்டால் ஆரோக்கியத்தை காக்கலாம்.நம் நாட்டில் கட்டமைக்கப்பட்டு உள்ள திருவிழாக்கள், சாஸ்திர
சொல்கிறார்கள்

ஆயுர்வேத மருத்துவர் மரு.ரா.பாலமுருகன்: மனிதனுக்கு மனிதன் உண்ணும் அளவு, காலம், மனதில் ஏற்படும் எண்ணம், சுகம் மற்றும் துக்கம் ஆகியவை வேறுபடும். ஆனால், அனைவருக்கும் பொதுவான காலம் என்ற பருவநிலை மாற்றமடையும் போது, நம் உணவிலும், நடைமுறை வாழ்க்கையிலும் சில மாற்றங்களை மேற்கொண்டால் ஆரோக்கியத்தை காக்கலாம்.நம் நாட்டில் கட்டமைக்கப்பட்டு உள்ள திருவிழாக்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் பருவ நிலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை.

அப்படி பின்பற்றக் கூடிய பல பழக்கவழக்கங்களில், புரட்டாசியில் அசைவம் தவிர்த்தல் என்பதும் ஒன்று.புரட்டாசி மாதத்தில் மனிதர்களுக்கு உணவை ஜீரணிக்கக் கூடிய சக்தி குறைந்து காணப்படும். பொதுவாக சைவ உணவுகள் எளிதில் ஜீரணித்து விடும்; அசைவ உணவு அதிக நேரம் எடுக்கும். எனவே, புரட்டாசி மாதத்தில் அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது.இது மட்டுமின்றி, புரட்டாசியில் வாதம் என்ற தோஷம் அதிகரித்து இருக்கும்போது மனநிலை, நிலையற்ற தன்மை அடையும். கோப, தாப உணர்வுகளும் மேலோங்கி இருக்கும்.

இதுபோன்ற சூழ்நிலையில் சைவ உணவே சிறந்தது. அசைவ உணவு கோப, தாபங்களை மேலும் அதிகரித்து விடும்.புரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவத்தை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைத்து விடும் என்பதில்லை.இது தவிர, புரட்டாசியில் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகளையும் ஆயுர்வேதம் கூறியுள்ளது. இப்பருவ காலத்தில் பகலில் உறங்குதல், வெளியில் உலாவுதல், அதிக உடற்பயிற்சி ஆகிய வற்றை தவிர்த்தல் வேண்டும்.பழமையான அரிசி, கோதுமை, பார்லி, சம்பா அரிசி போன்றவைகளை உணவாக பயன்படுத்த வேண்டும்.பாசிப் பருப்பை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை பருக வேண்டும். வாதத்தைக் குறைக்க கூடிய மூலிகை எண்ணெயை உடலில் தேய்த்து, நறுமண மூலிகைப் பொடி தேய்த்து குளிக்கலாம். லேசான, துாய்மையான, ஈரமில்லாத ஆடைகளை அணியலாம்.ஆக, புரட்டாசியில் அசைவம் மட்டுமல்ல, அஜீரணத்தைக் கொடுக்கும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதனால் ஆரோக்கியம் மேம்படும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-அக்-202102:27:48 IST Report Abuse
மலரின் மகள் தமிழ் மருத்துவம் இந்து மக்களின் வாழ்வியல் நடைமுறைகளை ஒற்றியே இருக்கிறது. மாற்று மதத்தில் அசைவத்திற்கு ஆசையம் முக்கியத்துவமும் உண்டு. புலால் உண்ணலாகாது என்று பெற்றோர்கள் உணர்ந்து ஜீவகாருண்யத்திற்கு மாறவேண்டும். மதத்தை குறுக்கே கொணர்ந்து ஆரோக்கியத்தை தவிர்க்க வேண்டாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X