'ஏழைகளுக்கு 50 லட்சம் வீடுகள் ஆறு ஆண்டுகளில் ஒப்படைப்பு'

Updated : அக் 07, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (6+ 66)
Share
Advertisement
லக்னோ : ''மத்தியில் 2014ல் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பின் ஆறு ஆண்டுகளில் 1.13 கோடி வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டு, இதுவரை 50 லட்சம் வீடுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன'' என, பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெரும் மகிழ்ச்சிமாநில தலைநகர் லக்னோவில், 'நாடு சுதந்திரம் பெற்ற 75ம் ஆண்டில் உருமாறும்
ஏழைகள், 50 லட்சம் வீடுகள், ஆறு ஆண்டுகள், ஒப்படைப்பு'

லக்னோ : ''மத்தியில் 2014ல் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பின் ஆறு ஆண்டுகளில் 1.13 கோடி வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டு, இதுவரை 50 லட்சம் வீடுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன'' என, பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.


பெரும் மகிழ்ச்சி

மாநில தலைநகர் லக்னோவில், 'நாடு சுதந்திரம் பெற்ற 75ம் ஆண்டில் உருமாறும் நகர்ப்புறம்' என்ற தலைப்பிலான மாநாட்டையும், கண்காட்சியையும், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார். மேலும், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உ.பி.,யில் 75 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 75 ஆயிரம் வீடுகளை பயனாளிகளிடம் பிரதமர் ஒப்படைத்தார்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில் அனைத்து சொத்துக்களும், வீட்டுக்கு தேவையான அனைத்தும் ஆண்களின் பெயர்களிலேயே இருக்கின்றன. இதில் சில மாற்றங்கள் தேவை. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கையால் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரிலும் அல்லது கணவன்- மனைவி இருவர் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாரத அன்னைக்காக தன் வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில், லக்னோவில் உள்ள அம்பேத்கர் பல்கலையில் இருக்கை அமையப் போவதை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சிஅடைகிறேன்.

மத்தியில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பின் கடந்த ஆறு ஆண்டு களில் நகர்ப்புறங்களில் 1.13 கோடி வீடுகள் கட்ட உத்தரவிட்டப்பட்டன. இதில் 60 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. வீடுகள் இன்றி குடிசைப்பகுதியில் வசித்த மூன்று கோடி நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள் இன்று லட்சாதிபதிகளாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

உ.பி.,யில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின் ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நகர்ப்புற ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.மேலும் 14 லட்சம் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.


சேமிப்பு

நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்னைகள் மற்றும் சவால்களை சமாளிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்துள்ளது. இதில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் கொண்டு வந்தது முக்கியமான நடவடிக்கை. எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டதன் வாயிலாக உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் 1,000 கோடி ரூபாய் சேமிக்கின்றன. 'பிரதமரின் ஸ்வாநிதி' திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் வங்கிகளுடன் இணைந்துள்ளனர்.

நாட்டில் 2014ம் ஆண்டில் 250 கி.மீ துாரத்துக்கு குறைவாக மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. தற்போது 750 கி.மீ., துாரத்துக்கு மேல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதை, 1,000 கி.மீ., துாரமாக அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.


'அகல் விளக்கு ஏற்றுங்க'


உத்தர பிரதேசத்தில் 2017ல் பா.ஜ., ஆட்சி அமைந்த பின் அயோத்தியில் தீபாவளி பண்டிகை தீபோற்சவமாக கொண்டாடப்படுகிறது.

இது குறித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:அயோத்தியில் ஐந்தாம் ஆண்டாக, வரும் தீபாவளி பண்டிகையன்று தீபோற்சவம் கொண்டாடப்பட உள்ளது.பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில உ.பி.,யில் பயன்பெற்ற ஒன்பது லட்சம் பயனாளரும், தங்கள் வீடுகளில் தீபாவளியன்று இரண்டு அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும்.அயோத்தியில் மட்டும் 7.5 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டால் ராமபிரான் மகிழ்ச்சியடைவார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6+ 66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
06-அக்-202113:06:27 IST Report Abuse
Sandru மனைவி, பிள்ளை, குடும்பம் என்று எதுவும் இல்லாத இவர்கள் மிக ஆனந்தமான சூழ்நிலையில் சிரித்து கொண்டு இருப்பது இவர்களது அறிவற்ற நிலையை காட்டுகிறது.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
06-அக்-202107:59:37 IST Report Abuse
Suri மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை ஒன்றிய இணை அமைச்சரின் மகனே கெடுத்து குட்டி சுவராக்கும்படி கார் ஏற்றி விவசாயிகளை கொன்று விட்டு இருவரும் எப்படி பக்கத்தில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மனசாட்சியே இல்லாதவர்கள்.
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
06-அக்-202107:53:17 IST Report Abuse
ganesha இது தான் பிஜேபி அரசு. மோடி அரசு யோகி அரசு. மக்கள் அரசு. சத்திய அரசு. உண்மையான அரசு. நேர்மையானவர்களுக்கு, சத்யமானவர்களுக்கு, நாடு நல்லா இருக்கணும், முக்கியமாக ஏழைகளும் பட்டியல் இனத்தவர்களுக்கும் முன்னேறவேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், நல்லவர்களுக்கு மட்டும் தான் இந்த அரசை பிடிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X