பொது செய்தி

இந்தியா

வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு... ஆலோசனை!எல்லைகளில் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த திட்டம்!

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுடில்லி :நாட்டின் எல்லை பகுதியில் உள்ள வன நிலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளஅரசிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பதால், பணிகள் தாமதமாகின்றன. இதையடுத்துவன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆலோசித்துள்ளது.வனப்பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் வன பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுடில்லி :நாட்டின் எல்லை பகுதியில் உள்ள வன நிலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளஅரசிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பதால், பணிகள் தாமதமாகின்றன.
இதையடுத்துவன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆலோசித்துள்ளது.வனப்பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் வன பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம், ௧௯௮௦ல் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி வனப்பகுதிகளில் எந்த பணிகள் மேற்கொள்வதாக இருந்தாலும், அதற்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.
நாட்டின் எல்லைப்பகுதிகளை ஒட்டி அதிக அளவில் வனப்பகுதிகள் அமைந்துள்ளன.


தாமதம்



நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளில் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகளை ராணுவம் மேற்கொள்கிறது. ஆனால் இந்த பணிகளை பெரும்பாலும் வனப்பகுதிகளில் தான் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதற்கு மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டியிருப்பதால் வளர்ச்சிப் பணிகள் தாமதமாகின்றன.பல்வேறு காரணங்களால் பணிகள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது நிறுத்தப்படுகின்றன. இதையடுத்து வனப்பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த எல்லைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாட்டின் சர்வதேச எல்லை பகுதிகளில் வளர்ச்சி மற்றும் ராணுவ பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.ஆனால் வனப்பகுதிகளில் வனத்துக்கு தொடர்பில்லாத பணிகளை மேற்கொள்ள முன் கூட்டியே மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என, வன பாதுகாப்பு சட்டம் கூறுகிறது. இதனால் பணிகள் தாமத மாகின்றன அல்லது நிறுத்தப்படுகின்றன; இது, பாதுகாப்பு விவகாரங்களுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


திட்டமிடல்



இதையடுத்து வனபாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது. எல்லைகளில் வளர்ச்சி, பாதுகாப்பு, உள்கட்டமைப்புபணிகளை வனப்பகுதிகளில் மேற்கொள்ள மத்திய அரசிடம் முன் கூட்டியே அனுமதி பெறுவதற்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் வன பாதுகாப்பு சட்டம் ௧௯௮௦ல் அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன் ரயில்வே, சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை ஆகிய துறைகள் கையகப்படுத்திய வனப்பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முன் கூட்டியே அனுமதி பெறுவதிலும் விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்தும், மக்களிடமிருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இன்னும் ௧௫ நாட்களுக்குள் யார் வேண்டுமானாலும் ஆலோசனை தெரிவிக்கலாம்.


பாதிப்பு ஏற்படாது



இந்த சட்ட திருத்தம் மேற்கொள்வதால் வன பாதுகாப்புக்கோ, வன விலங்குகள் பாதுகாப்புக்கோ, எந்த பாதிப்பும் ஏற்படாது. காடு வளர்ப்பு, மிருககாட்சி சாலைகள் அமைத்தல் உள்ளிட்டட வனம் தொடர்பான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X