பொது செய்தி

தமிழ்நாடு

மனமகிழ் மன்றங்களில் ஆய்வு நடத்த உத்தரவு

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை:உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள மனமகிழ் மன்றங்களில் திடீராய்வு மேற்கொள்ள சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.சங்கங்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்படும், மனமகிழ் மன்றங்கள் மீது பல்வேறு புகார்கள் எழுகின்றன. இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மன்றங்களில், பதிவுத் துறை ஆய்வு மேற்கொள்ள

சென்னை:உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள மனமகிழ் மன்றங்களில் திடீராய்வு மேற்கொள்ள சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.

சங்கங்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்படும், மனமகிழ் மன்றங்கள் மீது பல்வேறு புகார்கள் எழுகின்றன. இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மன்றங்களில், பதிவுத் துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.

இது தொடர்பாக, பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் பிறப்பித்துள்ள சுற்றறிக்கை: பொழுது போக்கு, மனமகிழ் மன்றங்கள், சங்கங்களின் பதிவு செயல்பாடு குறித்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த சங்கங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளதா, பதிவு முறையாக புதுப்பிக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

சங்கங்கள், பதிவு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்று பார்க்க வேண்டும். சட்ட விதிகளுக்கு மாறாக அவை செயல்படுவது தெரியவந்தால், நோட்டீஸ் அளித்து கலைப்பு நடவடிக்கைகளை துவக்க வேண்டும்.சங்கங்களின் பதிவாளர்கள், சங்க சார் - பதிவாளர்கள், ஒவ்வொரு சங்கத்துக்கும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட அளவிலான சிறப்பு குழுக்கள் அமைத்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X