13 பேர் சுட்டுக்கொலை தலிபான் அட்டூழியம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கெய்ரோ:ஆப்கனில், சரணடைந்த முன்னாள் வீரர்கள் உட்பட 13 பேரை, தலிபான் அமைப்பினர் சுட்டுக் கொன்றதாக, சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானை இரு மாதங்களுக்கு முன் தலிபான் அமைப்பு கைப்பற்றியது. மக்கள் அச்சம்அடுத்த சில நாட்களில் டேகாண்டி மாகாணம் கஹோர் கிராமத்தில் தலிபான் படையினர் புகுந்தனர். அங்கு தங்கியிருந்த ஆப்கன் தேசிய

கெய்ரோ:ஆப்கனில், சரணடைந்த முன்னாள் வீரர்கள் உட்பட 13 பேரை, தலிபான் அமைப்பினர் சுட்டுக் கொன்றதாக, சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானை இரு மாதங்களுக்கு முன் தலிபான் அமைப்பு கைப்பற்றியது. மக்கள் அச்சம்அடுத்த சில நாட்களில் டேகாண்டி மாகாணம் கஹோர் கிராமத்தில் தலிபான் படையினர் புகுந்தனர். அங்கு தங்கியிருந்த ஆப்கன் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 34 வீரர்கள், ஆயுதங்களை போட்டு, தலிபானிடம் சரண் அடைந்தனர்.

இந்நிலையில் ஆக., 30ல் தலிபான் படையைச் சேர்ந்த, 300 பேர் கஹோர் கிராமத்திற்கு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அச்சத்தில் வெளியேற முயற்சித்து உள்ளனர். உடனே அவர்களை நோக்கி தலிபான்கள் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் பலியாயினர்.

ஆப்கன் முன்னாள் வீரர் ஒருவர் திருப்பி சுட்டதில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தலிபான்கள், சரண் அடைந்த ஆப்கன் முன்னாள் வீரர்கள் ஒன்பது பேரை அருகில் இருந்த ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றுஉள்ளனர்.


மன்னிப்பு

அவர்கள், சிறுபான்மையினரான ஹசரஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், 'வீடியோ' ஆகியவற்றை ஆய்வு செய்து நடந்த சம்பவம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக, பொதுமன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து தலிபான் அமைப்பு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X