அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே அமைதிக்கான வழி'

Updated : அக் 07, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை : 'வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதே, ஒட்டுமொத்த அமைதிக்கும் வழிவகுக்கும்' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: உ.பி., மாநிலத்தில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.ஒரு பத்திரிகையாளர் உட்பட, ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். அதைத் தொடர்ந்து, வன்முறை
வேளாண் சட்டங்கள், திரும்ப பெறுவதே அமைதிக்கான வழி'

சென்னை : 'வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதே, ஒட்டுமொத்த அமைதிக்கும் வழிவகுக்கும்' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: உ.பி., மாநிலத்தில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.ஒரு பத்திரிகையாளர் உட்பட, ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். அதைத் தொடர்ந்து, வன்முறை நிகழ்ந்துள்ளது.கடந்த, 300 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவு தான், உ.பி., மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள்.

இத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா கைது செய்யப்பட்டு உள்ளார். முன்னாள் முதல்வர் அகிலேஷ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு பின்

விடுவிக்கப்பட்டுள்ளார்.இந்தக் கொந்தளிப்புக்கு காரணமானவர்கள் மீது, நீதி விசாரணை நடத்த வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை, மத்திய அரசு உணர வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
06-அக்-202120:08:27 IST Report Abuse
தமிழ்வேள் மண்டி புரோக்கர்களிடமிருந்து ,திமுகவுக்கும் சேரவேண்டிய கப்பம் கரெக்ட்டாக வந்துகொண்டிருக்கிறது போலும் ...போராடுபவன் எவனும் விவசாயியே கிடையாது ...ஆடிக்கார் அய்யாசாமி போல ஒரு டுபாக்கூர் கூட்டம் ..
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
06-அக்-202119:41:41 IST Report Abuse
Rajagopal திருடர்களிடம் கேட்டால் போலீஸ் இருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். போலீஸ் கூடாது, நீதிமன்றங்கள் கூடாது, சிறைகள் கூடாது. திமுக வேளாண் சட்டத்தை எதிர்ப்பது, திருடர்கள் சட்டமே கூடாது என்று சொல்வதற்கு சமம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
06-அக்-202119:06:40 IST Report Abuse
RajanRajan திராவிட லஞ்ச ஊழலை திரும்ப பெறுவதால் மக்களின் ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்பதுவும் திருப்பு முனை தானே தல. எப்படி சொன்னாலும் திராவிட கட்சிகளுக்கு இது பொருந்தும். ஜெய் ஸ்ரீராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X