கோத்தபய ராஜபக்சே உடன் வெளியுறவு செயலர் பேச்சு

Added : அக் 05, 2021
Share
Advertisement
கொழும்பு:இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை, இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா சந்தித்து பேசினார்.ஐ.நா., பொதுச் சபை மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை திரும்பினார். அவரை, இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா சந்தித்து பேசினார். இருவரும், இந்தியா - இலங்கை இடையிலான பரஸ்பர நட்பு மற்றும்
 கோத்தபய ராஜபக்சே உடன் வெளியுறவு செயலர் பேச்சு

கொழும்பு:இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை, இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா சந்தித்து பேசினார்.

ஐ.நா., பொதுச் சபை மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை திரும்பினார். அவரை, இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா சந்தித்து பேசினார். இருவரும், இந்தியா - இலங்கை இடையிலான பரஸ்பர நட்பு மற்றும் கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து பேசியதாக, இந்திய துாதரகம் தெரிவித்து உள்ளது.

நான்கு நாள் பயணமாக இலங்கை சென்ற வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன், அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, இலங்கை வெளியுறவுத் துறை செயலர் ஜெயநாத் கொலம்பகேவை சந்தித்து, இரு நாடுகளின் பரஸ்பர நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சு நடத்தினார். மேலும், இந்திய துாதரகம் சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X