இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
ஸ்டாக்ஹோம்:இயற்பியல் துறையில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலியைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்:இயற்பியல் துறையில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலியைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு, ஜப்பானைச் சேர்ந்த சியுகுரோ மனபி, 90, ஜெர்மனியின் கிளாஸ் ஹசல்மன், 89, இத்தாலியைச் சேர்ந்த ஜியார்ஜியோ பரிசி, 73, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சியுகுரோ மனபி, கிளாஸ் ஹசல்மன் ஆகியோர், புவியின் தட்ப வெட்பம், மாறுதல்கள் மற்றும் உலக வெப்பம் குறித்த நம்பகமான முன்னெச்சரிக்கை தகவல் சார்ந்த வடிவமைப்பு பணிகளுக்காக நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். சியுகுரோ மனபி, 1960 முதல் வாயு மண்டலத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தால் பூமியின் வெப்பம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை ஆராய்ந்து, அடிப்படை கோட்பாடுகளை உருவாக்கி கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் 10 ஆண்டுகள் கழித்து, கிளாஸ் ஹசல்மன் ஆய்வு செய்து, தட்ப வெப்பம், பருவ நிலை மாற்றம் ஆகியவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை அறிவதற்கான வழிமுறைகளை உருவாக்கிஉள்ளார். பருவநிலை தொடர்பான சிக்கலான விபரங்களை அறிய இயற்பியலும், கணிதமும் இணைந்த கோட்பாட்டை உருவாக்கியதற்கு ஜியார்ஜியோ பரிசி நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X