பொது செய்தி

தமிழ்நாடு

நாளை காவிரி ஆணைய கூட்டம் தமிழக அதிகாரிகள் ஆலோசனை

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை:காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், நாளை நடக்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்பது குறித்து, தமிழக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.காவிரி மேலாண்மை ஆணையத்தின், 14வது கூட்டம் செப்., 27ல் டில்லியில் நடந்தது. இதில், பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழக பிரதிநிதிகளாக பங்கேற்றனர்.தமிழகத்திற்கு கர்நாடகா நிலுவை

சென்னை:காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், நாளை நடக்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்பது குறித்து, தமிழக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின், 14வது கூட்டம் செப்., 27ல் டில்லியில் நடந்தது. இதில், பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழக பிரதிநிதிகளாக பங்கேற்றனர்.தமிழகத்திற்கு கர்நாடகா நிலுவை வைத்துள்ள, 30 டி.எம்.சி., நீரை திறக்க வலியுறுத்தப்பட்டது.

அதை ஏற்ற காவிரி ஆணைய தற்காலிக தலைவர் எஸ்.கே.ஹல்தர், தமிழகத்திற்கான நிலுவை நீரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார்.இருந்தும், நிலுவை நீரை கர்நாடக அரசு இன்னும் விடுவிக்கவில்லை. காவிரி ஆணையத்தின் நிரந்தர தலைவராக, எஸ்.கே.ஹல்தர் நியமிக்கப் பட்டு உள்ளார்.

இந்நிலையில், ஆணையத்தின் கூட்டம் நாளை டில்லியில் நடக்கவுள்ளது. நிலுவை நீரை வழங்காததால், கூட்டத்தை தள்ளிவைக்கும்படி, கர்நாடக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு நிலுவை நீரை திறக்க இரண்டு முறை ஆணையம் உத்தரவிட்டும், அதை கர்நாடகா பின்பற்றவில்லை.

எனவே, நாளை நடக்கஉள்ள கூட்டத்தில்பங்கேற்பதா, புறக்கணிப்பதா என்று தமிழக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்கும் பட்சத்தில், கடும் எதிர்ப்பை பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், நாளை நடக்கஉள்ள கூட்டத்தில் அனல் பறக்கும் என்று தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X