பொது செய்தி

தமிழ்நாடு

பழைய இடத்திலேயே வேண்டும் சந்தை : காய்கறி விற்பனையாளர்கள் கோரிக்கை

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:மசக்காளிப்பாளையம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வாரச்சந்தை தற்போது, இடம் மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் பழைய இடத்திலே சந்தை அமைக்க அனுமதி தரவேண்டுமென, காய்கறி விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட 57வது வார்டு மசக்காளிப்பாளையம் ரவுண்டானா பகுதியில் கடந்த, 12 ஆண்டுகளுக்கு மேலாக வியாழக்கிழமையன்று வாரச்சந்தை
 பழைய இடத்திலேயே வேண்டும் சந்தை : காய்கறி விற்பனையாளர்கள் கோரிக்கை

கோவை:மசக்காளிப்பாளையம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வாரச்சந்தை தற்போது, இடம் மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் பழைய இடத்திலே சந்தை அமைக்க அனுமதி தரவேண்டுமென, காய்கறி விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட 57வது வார்டு மசக்காளிப்பாளையம் ரவுண்டானா பகுதியில் கடந்த, 12 ஆண்டுகளுக்கு மேலாக வியாழக்கிழமையன்று வாரச்சந்தை நடக்கும்.

இங்கு, சிங்காநல்லுார், ஹோப்காலேஜ், ஆவாரம்பாளையம், ஒண்டிப்புதுார், காந்திமாநகர் என, பல்வேறு பகுதிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட காய்கறி விற்பனையாளர்கள் சாலையோரம் கடை அமைத்து விற்பனை செய்து வந்தனர்.கொரோனா காரணமாக சந்தை போட அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, கோவையின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், மசக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள சிலர், 'இப்பகுதியில் சந்தை போட்டால் கொரோனா தொற்று அதிகரிக்கும், ஆட்டோ ஸ்டாண்டுகளுக்கு இடையூறு ஏற்படும்' என, பல்வேறு காரணங்களை கூறி, சந்தை போட அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதனால், காய்கறி விற்பனையை நம்பியுள்ள வியாபாரிகள் வேறு வழியின்றி, மசக்காளிப்பாளையம் டூ ஜி.வி., ரெசிடென்சி செல்லும் வழியில் சந்தையை போட்டு வருகின்றனர்.அதனால் அவ்விடத்தில் மின் விளக்கு வசதி, டாஸ்மாக் மதுக்கடை, குடிமகன்களின் தொல்லை என, பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர்.ஒரு சிலரால், 100க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், பழைய இடத்திற்கே சந்தை அமைக்க அனுமதி தர வேண்டுமென, காய்கறி வியாபாரிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு
தேவையற்ற காரணங்களை கூறி சந்தை போட அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால், வாழ்வாதாரம் இழந்து பலரும் தவித்து வருகிறோம். தற்போது மழைக்காலம் என்பதால், காய்கறி வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.- எம்.மணிமேகலை, பீளமேடு புதுார்.குடிமகன்கள் தொல்லைதற்போது சந்தை போடும் இடத்தில் போதிய மின்விளக்கு வசதி இல்லாமல், இருளில் வியாபாரம் செய்து வருகிறோம்.

அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடை உள்ளதால், குடிமகன்களின் தொல்லை ஏற்படுமோ என்ற அச்சத்திலேயே உள்ளோம்.- எஸ். அபிராமி, சிங்காநல்லுார்வியாபாரம் குறைந்ததுமசக்காளிப்பாளையம் சந்தையை நம்பி, 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். இடம் மாற்றத்தால் வியாபாரம் இன்றி தவிக்கிறோம். பழைய இடத்தில் சந்தை அமைக்க அனுமதி கொடுத்தால், விற்பனை அதிகரிக்கும்; எங்களது பிரச்னைகளும் குறையும்.- ஏ. சிவராம், சிங்காநல்லுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X