பொது செய்தி

தமிழ்நாடு

'புத்தகங்கள் நமக்கு மரங்கள் தந்த பரிசு'

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், நுால் வெளியீட்டு விழா நடந்தது.இதில், கவிஞர் கிரீஷ் கோபிநாத் எழுதிய, 'அருநில ஆர்கலி' என்ற கவிதை தொகுப்பு மற்றும் கவிவாணன் எழுதிய 'புதிர் வினை' சிறுகதை தொகுப்பு ஆகிய இரண்டு நுால்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சிக்கு, கவிஞர் ஜோதிக்குமார் தலைமை வகித்தார். நுால்களை ஜென்னிஸ் வெளியிட, மயில்சாமி, ரங்கநாதன்

கோவை:கோவையில் முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், நுால் வெளியீட்டு விழா நடந்தது.இதில், கவிஞர் கிரீஷ் கோபிநாத் எழுதிய, 'அருநில ஆர்கலி' என்ற கவிதை தொகுப்பு மற்றும் கவிவாணன் எழுதிய 'புதிர் வினை' சிறுகதை தொகுப்பு ஆகிய இரண்டு நுால்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சிக்கு, கவிஞர் ஜோதிக்குமார் தலைமை வகித்தார். நுால்களை ஜென்னிஸ் வெளியிட, மயில்சாமி, ரங்கநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.கவிதை நுால் குறித்து கவிஞர் உமாமகேஸ்வரி பேசியதாவது:இந்த நுாலில் உள்ள கவிதைகளில், கவித்துவமான புதிய சொற்கள் இடம் பெற்றுள்ளன. 'அறுக்கப்பட்ட மரங்களுக்கு எனது கவிதை நூல் சமர்ப்பணம்' என்று எழுதியிருக்கிறார். காகித தயாரிப்புக்காக வெட்டப்படும் மரங்களுக்காக இவரது மனம் வருந்துகிறது. புத்தகங்கள் எல்லாம் நமக்கு மரங்கள் தந்த பரிசுதான் என்பதை, நாம் மறந்து விட கூடாது. அதை இந்த கவிஞர் மறக்கவில்லை. புதிய மொழி நடையும் நல்ல கற்பனைகளும், இந்த நூலுக்கு அழகு சேர்த்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.எழுத்தாளர் கரீம், கவிஞர்கள் தங்கமுருகேசன், வெங்கடசேன், நாட்டுப்புறக் கலைஞர்கள் வீரமணி, தஞ்சை தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X