விண்வெளி மையத்தில் திரைப்பட ஷூட்டிங்| Dinamalar

விண்வெளி மையத்தில் திரைப்பட 'ஷூட்டிங்'

Added : அக் 05, 2021
Share
மாஸ்கோ:சர்வதேச விண்வெளி மையத்தில் திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதற்காக நடிகை, இயக்குனரை, விண்கலம் மூலம் ரஷ்யா அனுப்பியுள்ளது.ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் க்ளிம் ஷிபென்கோ. இவர் சேலன்ச் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் கதை, விண்வெளியில் ஏற்படும் ஒரு மருத்துவ நெருக்கடி தொடர்பானது. இதைஅடுத்து, படப்பிடிப்பை சர்வதேச விண்வெளி மையத்தில் நடத்த

மாஸ்கோ:சர்வதேச விண்வெளி மையத்தில் திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதற்காக நடிகை, இயக்குனரை, விண்கலம் மூலம் ரஷ்யா அனுப்பியுள்ளது.ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் க்ளிம் ஷிபென்கோ. இவர் சேலன்ச் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் கதை, விண்வெளியில் ஏற்படும் ஒரு மருத்துவ நெருக்கடி தொடர்பானது. இதைஅடுத்து, படப்பிடிப்பை சர்வதேச விண்வெளி மையத்தில் நடத்த முடிவு செய்து, அதற்கு ரஷ்ய அரசிடம் அனுமதியும் பெற்றனர்.

இயக்குனர் க்ளிம் ஷிபென்கோ, நடிகை ஜூலியா பெரெஸ்லிட், விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ் ஆகியோர் ஆசிய நாடான கஜகஸ்தானில் உள்ள பைகானுார் ஏவுதளத்திலிருந்து சோயூஸ் எம்.எஸ்.௧௯ விண்கலம் வாயிலாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். மூன்றரை மணி நேர பயணத்தக்கு பின், சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். சர்வதேச விண்வெளி மையத்தில் படப்பிடிப்பு முடிந்து, வரும் 17 ம் தேதி பூமிக்கு படக்குழுவினர் திரும்புகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X