சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரிக்கெட் தகராறு: இருவருக்கு கத்திக்குத்து

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:சின்னவேடம்பட்டி, ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த், 26; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சிலருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் கிரிக்கெட் விளையாட்டில் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இரு நாட்களுக்கு முன், சின்னவேடம்பட்டியிலுள்ள ஒரு பேக்கரியில் நண்பர் அசோக்குடன் அரவிந்த் பேசி கொண்டிருந்தார்.அப்போது அங்கு

கோவை:சின்னவேடம்பட்டி, ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த், 26; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சிலருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் கிரிக்கெட் விளையாட்டில் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இரு நாட்களுக்கு முன், சின்னவேடம்பட்டியிலுள்ள ஒரு பேக்கரியில் நண்பர் அசோக்குடன் அரவிந்த் பேசி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த நான்கு பேர் கும்பல், அரவிந்த் மற்றும் அவரது நண்பரிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.தாக்குதலில் அரவிந்த் மற்றும் மற்றொரு தரப்பை சேர்ந்த சூர்யபிரகாஷ், 25 ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருதரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீசார் சின்னவேடம்பட்டியை சேர்ந்த மாசி, சிவா, சூர்யபிரகாஷ், மணி, அரவிந்த் மற்றும் அசோக் ஆகிய ஆறு பேர் மீது தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X