பொது செய்தி

தமிழ்நாடு

கோவை பேராசிரியருக்கு சிறப்பு அங்கீகாரம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:பாரதியார் பல்கலையின் தாவரவியல் துறை பேராசிரியர் பரிமேலழகன், உயிரியலுக்கான வேந்திய சங்கத்தின் (fellow of royal society of biology- ஆர்.எஸ்.பி., ) அறிஞராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆர்.எஸ்.பி., இங்கிலாந்து நாட்டிலிருந்து செயல்படும் மதிப்புமிக்க அமைப்பாகும். உயிரியல் துறைக்கான ஒற்றை குரலாக இவ்வமைப்பு உள்ளது. இங்கிலாந்து அரசுக்கு இத்துறை சார்ந்து ஆலோசனை வழங்குதல், கொள்கை வகுத்தல்,
 கோவை பேராசிரியருக்கு சிறப்பு அங்கீகாரம்

கோவை:பாரதியார் பல்கலையின் தாவரவியல் துறை பேராசிரியர் பரிமேலழகன், உயிரியலுக்கான வேந்திய சங்கத்தின் (fellow of royal society of biology- ஆர்.எஸ்.பி., ) அறிஞராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆர்.எஸ்.பி., இங்கிலாந்து நாட்டிலிருந்து செயல்படும் மதிப்புமிக்க அமைப்பாகும். உயிரியல் துறைக்கான ஒற்றை குரலாக இவ்வமைப்பு உள்ளது. இங்கிலாந்து அரசுக்கு இத்துறை சார்ந்து ஆலோசனை வழங்குதல், கொள்கை வகுத்தல், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இவ்வமைப்புக்கு உள்ளது. பாரதியார் பல்கலை பேராசிரியர் பரிமேலழகன் மூலிகைகளின் பயன்பாடுகளையும், அதன் வகைகள், பயன்பாட்டு முறைகள், மருத்துவ மகத்துவத்தை வெளிகொணர தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு காப்புரிமைகளையும் பெற்றுள்ளார்.இவரது ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள், திட்ட நிதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இச்சங்கத்தின் அறிஞராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X