செட்டிபாளையம் ரோட்டில் 'தொபுக்கடீர்!' பாதைகள் படுகுழிகளாக மாறிய அவலம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:கோவை போத்தனுார் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து செல்லும் செட்டிபாளையம் ரோடு, குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.போத்தனுார் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, செல்லும் செட்டிபாளையம் ரோட்டில், ஆறு மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை பணிக்காக, ரோட்டின் நடுவே இரண்டு கி.மீ., துாரம் வரை குழி
 செட்டிபாளையம் ரோட்டில் 'தொபுக்கடீர்!' பாதைகள் படுகுழிகளாக மாறிய அவலம்

கோவை:கோவை போத்தனுார் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து செல்லும் செட்டிபாளையம் ரோடு, குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.போத்தனுார் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, செல்லும் செட்டிபாளையம் ரோட்டில், ஆறு மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை பணிக்காக, ரோட்டின் நடுவே இரண்டு கி.மீ., துாரம் வரை குழி தோண்டப்பட்டது.பணிகள் முடிந்த பின், தோண்டிய குழிகளை சரியாக மூடாமல் விட்டதால், பள்ளம் படுகுழியாக காட்சி அளிக்கிறது. இப்போது மழை பெய்து வருவதால் குழிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.குழி இருப்பது தெரியாததால், இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். நேற்று முன் தினம் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் வழுக்கி குழிக்குள் விழுந்து, தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ரோட்டில் உள்ள குழிகளை மூடி, சீர் செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X