3ம் டிவிஷன் கிரிக்கெட்: இ.ஏ.பி., அணி வெற்றி | Dinamalar

3ம் டிவிஷன் கிரிக்கெட்: இ.ஏ.பி., அணி வெற்றி

Added : அக் 05, 2021
Share
கோவை:கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டு 'தாமோதரன் அறக்கட்டளை டிராபிக்கான' மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது. இதில், இ.ஏ.பி., கிரிக்கெட் அகாடமி அணி, மிராக்கிள் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மிராக்கிள் சி.சி., அணி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 40.4 ஓவரில்,

கோவை:கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டு 'தாமோதரன் அறக்கட்டளை டிராபிக்கான' மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது. இதில், இ.ஏ.பி., கிரிக்கெட் அகாடமி அணி, மிராக்கிள் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மிராக்கிள் சி.சி., அணி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 40.4 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 84 ரன் எடுத்தது. அணியில் சிறப்பாக பந்து வீசிய மாரிமுத்து- 4 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய இ.ஏ.பி., அணியினர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 11.4 ஓவரில், 2 விக்கெட் இழப்புக்கு, 88 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X