காங்கிரஸ் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

Added : அக் 05, 2021
Share
கோவை:பிரியங்கா கைதை கண்டித்து, கோவையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.உ.பி., துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில், அமைச்சர் மிஸ்ராவின் கார் ஏறியதில், நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைதொடர்ந்து நடந்த வன்முறையில், 8
 காங்கிரஸ் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை:பிரியங்கா கைதை கண்டித்து, கோவையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.உ.பி., துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில், அமைச்சர் மிஸ்ராவின் கார் ஏறியதில், நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைதொடர்ந்து நடந்த வன்முறையில், 8 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இச்சூழலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை பார்க்க சென்ற பிரியங்கா கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X