என்.சி.சி., மாணவர்களுக்கு நீர் மேலாண்மை பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என்.சி.சி., மாணவர்களுக்கு நீர் மேலாண்மை பயிற்சி

Added : அக் 05, 2021
Share
கோவை:பருவமழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், பள்ளி தேசிய மாணவர் படை சார்பில், மாணவர்களுக்கு நீர் மேலாண்மை பயிற்சி நேற்று நடந்தது.இதில், மழைநீர் சேமிப்பது எப்படி, நீராதாரங்களை பாதுகாத்தல், மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதோடு, கழிவுநீரை சுத்திகரித்தல், வீடு, பள்ளி, அலுவலகம், தொழிற்சாலை போன்ற

கோவை:பருவமழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், பள்ளி தேசிய மாணவர் படை சார்பில், மாணவர்களுக்கு நீர் மேலாண்மை பயிற்சி நேற்று நடந்தது.இதில், மழைநீர் சேமிப்பது எப்படி, நீராதாரங்களை பாதுகாத்தல், மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதோடு, கழிவுநீரை சுத்திகரித்தல், வீடு, பள்ளி, அலுவலகம், தொழிற்சாலை போன்ற இடங்களில் வீணாகும் நீரை பயனுள்ளதாக்குவது குறித்தும் விளக்கப்பட்டது.பயிற்சியின் இறுதியில், பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் வாழை மரக்கன்றுகள் நட்டனர். இதை வளர்க்கும் முறை குறித்து, பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் எடுத்துரைத்தார். பயிற்சியில் தலைமையாசிரியர் அமலோற்பவமேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X