பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் துவங்கியது வசூல் வேட்டை: நடவடிக்கை எடுப்பாரா எஸ்.பி.,?

Added : அக் 05, 2021
Share
Advertisement
மதுக்கரை:தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மாடுகள் தினமும் லாரி மூலம் கொண்டு செல்லப்படுகிறது. பெரும்பாலும் இவ்வாகனங்கள் நீலம்பூர் - மதுக்கரை பை பாஸ் வழியாக வந்து, வேலந்தாவளம் அல்லது வாளையார் வழியே எல்லையை கடக்கின்றன.இதில் பை -- பாஸ் சாலையின் துவக்கத்தில் சூலூர், மத்தியில் போத்தனூர், செட்டிபாளையம் மற்றும் இறுதியில் மதுக்கரை என நான்கு போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைகள்

மதுக்கரை:தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மாடுகள் தினமும் லாரி மூலம் கொண்டு செல்லப்படுகிறது. பெரும்பாலும் இவ்வாகனங்கள் நீலம்பூர் - மதுக்கரை பை பாஸ் வழியாக வந்து, வேலந்தாவளம் அல்லது வாளையார் வழியே எல்லையை கடக்கின்றன.இதில் பை -- பாஸ் சாலையின் துவக்கத்தில் சூலூர், மத்தியில் போத்தனூர், செட்டிபாளையம் மற்றும் இறுதியில் மதுக்கரை என நான்கு போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைகள் வருகின்றன.லாரிகளில் மாடுகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கொண்டு செல்லவேண்டும். ஆனால் மாடுகளை வாங்கி செல்வோர் வாகன வாடகையை கருத்தில் கொண்டு, அதிக எண்ணிக்கையில் ஏற்றி வருவர்.இதுபோல வரும் வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, மாடுகளை பறிமுதல் செய்ய வேண்டும்.ஆனால் பெரும்பாலும் போலீசாருக்கு மாமூல் கொடுத்துவிட்டு, லாரிகள் எல்லையை கடக்கின்றன. குறிப்பாக, மதுக்கரை போலீசாரின் எல்லைக்குள்தான் இவ்வசூல் வேட்டை அதிகம் நடக்கிறது.இதுகுறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானதால், கடந்த சில மாதங்களாக போலீசார் வசூல் வேட்டையை நிறுத்தியிருந்தனர். தற்போது மீண்டும் துவங்கியுள்ளனர்.இச்சாலையில் விபத்துகள் ஏற்பட்டால் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை ரோந்து போலீசார், மாடுகளை ஏற்றி வரும் லாரிகளை மட்டும் கண்காணித்து வசூல் செய்கின்றனர். இதுபோலவே ரேஷன் அரிசி கடத்தலும் தொடர்கிறது.என்னதான் செய்கிறார் எஸ்.பி.,?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X