பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டை விட்டு வெளியே வர முடியாது! செல்வபுரத்தை சூழப்போகிறது மழை வெள்ளம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:உக்கடம் பெரிய குளத்துக்கு நீர் வரும் சேத்துமா வாய்க்கால் துார்வாரப்படாமல் புதர்மண்டி காணப்படுவதால், கனமழை பெய்யும்போது, செல்வபுரத்துக்குள் தண்ணீர் புகும் அபாயம் இருக்கிறது.உக்கடம் பெரிய குளத்துக்கு செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்தும், நொய்யல் ஆற்றில் இருந்து சேத்துமா வாய்க்கால் வழியாகவும் நீர் வரத்து காணப்படும்.நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர், பேரூர் தமிழ்
 வீட்டை விட்டு வெளியே வர முடியாது! செல்வபுரத்தை சூழப்போகிறது மழை வெள்ளம்

கோவை:உக்கடம் பெரிய குளத்துக்கு நீர் வரும் சேத்துமா வாய்க்கால் துார்வாரப்படாமல் புதர்மண்டி காணப்படுவதால், கனமழை பெய்யும்போது, செல்வபுரத்துக்குள் தண்ணீர் புகும் அபாயம் இருக்கிறது.உக்கடம் பெரிய குளத்துக்கு செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்தும், நொய்யல் ஆற்றில் இருந்து சேத்துமா வாய்க்கால் வழியாகவும் நீர் வரத்து காணப்படும்.நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர், பேரூர் தமிழ் கல்லுாரிக்கு பின்புறம் இரு வழித்தடங்களில் பிரிந்து, ஆண்டிபாளையம் பிரிவு வழியாக, சேத்துமா வாய்க்காலில் பயணிக்கும். இவ்வாய்க்கால் புதர்மண்டி காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், சேத்துமா வாய்க்காலில் தண்ணீர் வரும்போது, செல்வபுரம் முத்துசாமி காலனி விரிவு பகுதிக்குள்ளும் புகுந்து விடுகிறது.10 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து விடும். வீட்டை விட்டு மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு, முடங்கி இருக்க வேண்டிய அவலம் ஏற்படும். அருகாமையில் உள்ள தோட்டங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.
உடனே, மாநகராட்சி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வர். வாய்க்காலில் இருந்த அடைப்புகளை தற்காலிகமாக அகற்றி, தண்ணீர் செல்ல வழியேற்படுத்துவர்.மழை நின்றதும் காணாமல் போய் விடுவர். தண்ணீர் வடிவதற்கு ஒரு வாரமாகி விடும். அதுவரை, அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து வரும்.இதற்கு தீர்வு காண, வாய்க்கால் இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் பணி துவக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலுக்கு பின், இப்பணியை செய்யாமல் அரைகுறையாக விட்டு விட்டனர்.

இப்போது, வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு புதர்மண்டி காணப்படுகிறது.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மழைப்பொழிவு காணப்படுவதால், ஆற்றில் தண்ணீர் வருகிறது. வாய்க்கால் உயரத்துக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது. மீண்டும் மழை பெய்யும்போது, செல்வபுரம் பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழை நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, அடைப்புகளை நீக்க, தமிழக அரசு அறிவுறுத்தியது. நகர் பகுதியில் மழை நீர் வடிகால்களை துார்வாரும் பணியில், மாநகராட்சி அக்கறை காட்டி வருகிறது.'வரும் முன் காப்போம்' என்கிற சொல்லுக்கேற்ப, வெள்ள நீரால் செல்வபுரம் மூழ்குவதற்கு முன், வாய்க்கால் அடைப்புகளை அகற்றி, தண்ணீர் சீராக செல்ல, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X