'காங்கிரஸ் மரபணுவில் கொள்ளை கலந்துள்ளது'

Added : அக் 05, 2021
Share
Advertisement
ராய்ப்பூர்:''காங்கிரசின் மரபணுவிலேயே கொள்ளை கலந்துள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ராய்ப்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது:நரேந்திர மோடி அரசின் வளர்ச்சி கொள்கை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை அடிப்படையாகக் கொண்டது.

ராய்ப்பூர்:''காங்கிரசின் மரபணுவிலேயே கொள்ளை கலந்துள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ராய்ப்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது:நரேந்திர மோடி அரசின் வளர்ச்சி கொள்கை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இதை விமர்சிக்கின்றனர். கொள்ளை என்ற விஷயம் காங்கிரஸின் மனதில் இருந்து என்றைக்குமே அகலாது; அது, அவர்களது மரபணுவில் கலந்துள்ளது.

அவர்களின் ஆட்சி காலத்தில் ஸ்பெக்ட்ரம், சுரங்கங்கள் சூறையாடப்பட்டன.சத்தீஸ்கரில் ஆட்சிஅமைக்க காங்கிரசுக்கு மக்கள் பெரும்பான்மை பலம் அளித்தனர். ஆனால் சத்தீஸ்கர் காங்., தலைவர்களுக்கு மக்கள் பணி செய்வதை விட, தினமும் டில்லிக்கு சென்று காங்., தலைமையை சந்திப்பது தான் முக்கிய பணியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X