கோவை குற்றாலத்தில் குளிக்க திடீர் தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவை குற்றாலத்தில் குளிக்க திடீர் தடை

Added : அக் 05, 2021
Share
தொண்டாமுத்தூர்:கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து, கோவை குற்றாலத்தில், சுற்றுலா பயணிகளுக்கு,

தொண்டாமுத்தூர்:கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து, கோவை குற்றாலத்தில், சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் நேற்று தடை விதித்தனர்.தடை விதித்தது குறித்து தெரியாமல், நேற்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள், கோவை குற்றாலத்திற்கு குடும்பத்துடன் வந்தனர். அவர்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர்.போளுவாம்பட்டி வனச்சரகர் சரவணன் கூறுகையில், "கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், நீர்வரத்து அதிகரித்ததால், மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த, 13 பேர் மட்டும், வனத்துறை ஊழியர்களுடன், சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டது," என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X