எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கோயில் திருப்பணிக்கு புது விதிகளை உருவாக்கி தி.மு.க., அரசு முட்டுக்கட்டை

Updated : அக் 06, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
மதுரை :தமிழக கோயில்களில் திருப்பணி செய்ய புதுப்புது விதிகளை உருவாக்கி தி.மு.க., அரசு முட்டுக்கட்டையிடுவதாக ஹிந்து அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடத்த திருப்பணி செய்யப்படும். இதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்தும், உபயதாரர்கள் மூலமும் பணி மேற்கொள்ளப்படும். இதில் உள்ளூர்காரர்களின் பங்களிப்பு அதிகம்
கோயில், திருப்பணி, புது விதிகள், திமுக, அரசு, முட்டுக்கட்டை

மதுரை :தமிழக கோயில்களில் திருப்பணி செய்ய புதுப்புது விதிகளை உருவாக்கி தி.மு.க., அரசு முட்டுக்கட்டையிடுவதாக ஹிந்து அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடத்த திருப்பணி செய்யப்படும். இதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்தும், உபயதாரர்கள் மூலமும் பணி மேற்கொள்ளப்படும். இதில் உள்ளூர்காரர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும். இது அவர்களுக்கு கவுரவம் கூட.

இந்நிலையில் ஹிந்து அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், இனி ஒரே பணியை பல பாகங்களாக பிரித்து உபயதாரர்கள் மூலம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உபயதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப சிறு திருப்பணிகளை செய்து கொடுப்பது தடுக்கப்பட்டுள்ளது.ஒரே பணியை வகைப்படுத்தி பிரித்து மதிப்பீடு செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சில வகை பணிக்கு கூடுதல் செலவு ஏற்படும்போது 'அந்த வேலைக்கான பணத்தை இங்கே துாக்கிப்போடு. அந்த வேலையை கிடப்பில் போடு' என திருப்பணிகளில் தொய்வு ஏற்படும். திருப்பணியை எந்த ஒப்பந்ததாரரும், உபயதாரரும் ஆர்வமுடன், இறை பணியாக மேற்கொள்ள முடியாத வகையில் பல விதிகளை உருவாக்கியுள்ளது.

ஹிந்து அமைப்பினர் கூறுகையில், ''அறநிலையத்துறையின் விதிகளை படித்து பார்த்தால் இனி எவரும் கோயில் திருப்பணிகளை செய்ய முன்வர மாட்டார்கள். ஒவ்வொரு மதிப்பீடும் அனுப்பும்போது அதை குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லதுதான். அதேசமயம் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறும்போது மதிப்பீட்டை மாற்றி மாற்றி அனுப்புவதிலேயே காலம் கழிந்துவிடும். திருப்பணி செய்வதும் தள்ளிபோகும். இதன்மூலம் கோயில் திருப்பணிக்கு தி.மு.க., அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது'' என்றனர்.


அறங்காவலர் குழு அமைக்க தயக்கம்


கோயில் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களின் பங்கு முக்கியம். எந்த ஒரு பணி என்றாலும் அறங்காவலர்களின் ஒப்புதல் அவசியம். ஆனால் 10 ஆண்டுகளாக பல கோயில்களில் இக்குழுவை அமைக்க முந்தைய அ.தி.மு.க., அரசும், தற்போதைய தி.மு.க., அரசும் ஆர்வம் காட்டவில்லை. அறங்காவலர்கள் வந்தால் தங்களுக்கு 'பவர்' இல்லாமல் போய்விடும் என அதிகாரிகள் கருதுவதே காரணம்.

கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தியதில் பயனற்ற நகைகளை உருக்கி கட்டியாக மாற்றி டெபாசிட் செய்து அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு கோயில் வளர்ச்சிக்கு செலவிட போவதாக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறி வருகிறார். இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rtn.E.Ramasubramanian - tiruppur,இந்தியா
06-அக்-202120:46:45 IST Report Abuse
Rtn.E.Ramasubramanian வினை விதைத்தவன் வினை அறுப்பான் ..... ரொம்ப சீக்கிரம் .... கண் கூடாக பார்க்கலாம் ..... நடக்கும் அனைத்தும் தனக்கே குழி வெட்டும் செயல் ....
Rate this:
Cancel
Rtn.E.Ramasubramanian - tiruppur,இந்தியா
06-அக்-202120:44:58 IST Report Abuse
Rtn.E.Ramasubramanian கரையான்கள் வேலையை ஆரபித்து விட்டது ...
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
06-அக்-202119:35:58 IST Report Abuse
spr கோயில் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களின் பங்கு முக்கியம். எந்த ஒரு பணி என்றாலும் அறங்காவலர்களின் ஒப்புதல் அவசியம். ஆனால் 10 ஆண்டுகளாக பல கோயில்களில் இக்குழுவை அமைக்க முந்தைய அ.தி.மு.க., அரசும், தற்போதைய தி.மு.க., அரசும் ஆர்வம் காட்டவில்லை. அறங்காவலர்கள் வந்தால் தங்களுக்கு 'பவர்' இல்லாமல் போய்விடும் என அதிகாரிகள் கருதுவதே காரணம்." உண்மையே கழகங்கள் இரண்டுமே இப்படித்தான் முதல்வர் ஆலைய பராமரிப்புக்கு ஆலைய சொத்துக்களை பயன்படுத்துகிறார் என்பது உண்மையானால் பாராட்டுவோம் அவரது செயல்களால் உண்மையிலேயே ஒவ்வொரு கோவிலுக்கும் என்ன சொத்து (நிலம் நகை) இருக்கிறது எவ்வளவு இதுவரை கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிய வரும் ஆனால் இவையனைத்தும் பொய்யாக போலியாக இருக்குமானால் விஞ்ஞான முறையில் கொள்ளையடிப்பதில் ஸ்டாலின் அவர் தந்தையை முந்துவார் பொல்லாத தெரிகிறது கோவில் நிலங்களை பட்டியலிடுவது மூலம் எங்கெங்கே அவை இருக்கிறது சந்தை மதிப்பு என்னவென்றெல்லாம் அறிந்து அதிக மதிப்புள்ளவற்றை ஏலத்தில் விற்க முயற்சித்தால் சிவன் சொத்து குலநாசம் என நம்பும் நல்லவர்கள் பங்கேற்க மாட்டார்கள் கடவுள் இல்லையென்று சொல்லும் கழகக் கண்மணிகளே ஆதாயம் அடைவார்கள் அதிலும் ஏலமும் மிக்க குறைந்த விலையில்தான் ஆரம்பிக்கும் எவரும் வராத வரையில் மிக்க குறைவான விலையில் அந்நிலங்களை வாங்க முடியும் அதே போலவே நகைகளை உருக்கும் போதே சேதாரம் போச்சு என்று கொஞ்சமும் பெரும்பாலானவை தங்கமே இல்லையென்று சொல்லியும் கொள்ளையடிக்கலாம் மீதமுள்ளதை ஏலத்தில் விற்க முயற்சித்தால் சிவன் சொத்து குலநாசம் என நம்பும் நல்லவர்கள் பங்கேற்க மாட்டார்கள் கடவுள் இல்லையென்று சொல்லும் கழகக் கண்மணிகளே ஆதாயம் அடைவார்கள் அதிலும் ஏலமும் மிக்க குறைந்த விலையில்தான் ஆரம்பிக்கும் எவரும் வராத வரையில் மிக்க குறைவான விலையில் அந்நகைகளை வாங்க முடியும் ஒரு பன்னாட்டு நாழிதழ் அந்த நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கியில் அடமானம் வைத்து நிதி திரட்ட அரசு முயல்வதாகக் கூறுகிறது வருவதில் கொஞ்சம் நம் மக்களுக்கு லஞ்சமாகக் கொடுத்தால் அவர்களும் இந்தக் கொள்ளையைக் கண்டு கொள்ள மாட்டார்கள் இதுவும் கொள்ளைதான் என்றாலும் அலாவுதீன் கில்ஜி தொடங்கி மாலிக்காபூர் என பலர் அடித்த கொள்ளையைப் போல இது சரித்திரமாகாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X