பொது செய்தி

தமிழ்நாடு

வீ லவ் கோவை கல்லூரிகள் ! இன்ஜி., கவுன்சிலிங்கில் மாணவர்கள் ஆர்வம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:பொறியியல் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்று முடிவில், கோவை கல்லுாரிகளை மாணவர்கள் அதிகமாக தேர்வு செய்துள்ளனர்.அண்ணா பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள பொறியியல் கல்லுாரிகளில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' கலந்தாய்வு நடந்து வருகிறது.இதில், பொது பிரிவின் முதல் சுற்றுக்கான இடங்கள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதில், 'டாப்பர்ஸ்'

கோவை:பொறியியல் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்று முடிவில், கோவை கல்லுாரிகளை மாணவர்கள் அதிகமாக தேர்வு செய்துள்ளனர்.அண்ணா பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள பொறியியல் கல்லுாரிகளில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' கலந்தாய்வு நடந்து வருகிறது.இதில், பொது பிரிவின் முதல் சுற்றுக்கான இடங்கள் நேற்று ஒதுக்கப்பட்டன.

இதில், 'டாப்பர்ஸ்' மாணவர்களின் விருப்பமாக உள்ள முதல், 35 கல்லுாரிகளில் 10ம், முதல் 10ல் 4ம் கோவை மாவட்டத்தில் உள்ளன. முதல் சுற்று முடிவில், கோவை சி.ஐ.டி., கல்லுாரியில் 81.46 சதவீத இடங்களும், நீலாம்பூர் பி.எஸ்.ஜி.,யில் 77.33 சதவீத இடங்களும், பீளமேடு பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரியில் 77.23 சதவீத இடங்களும், அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் 68.53 சதவீத இடங்களும், குனியமுத்துார் கிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் 50.76 சதவீத இடங்களும், அண்ணா பல்கலை மண்டல மையத்தில் 39.55 சதவீத இடங்களும், ஈஸ்வர் கல்லுாரியில் 21.31 சதவீத இடங்களும், வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா கல்லுாரியில் 18.39 சதவீத இடங்களும், கோவைபுதுார் கிருஷ்ணா கல்லுாரியில் 17.40 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன.முதல் பத்து இடங்களில் உள்ள கல்லுாரிகளில், இரண்டாம் சுற்று முடிவில், 100 சதவீத இடங்களிலும் மாணவர்கள் சேர்ந்துவிடுவர் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X