கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்தவர்களுக்கு தடுப்பூசி அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை:'மனநலம் பாதிக்கப்பட்டவர்களில், எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது' என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.உயர் நீதிமன்றத்தில், 'சீர்' என்ற தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்; அவர்களின்

சென்னை:'மனநலம் பாதிக்கப்பட்டவர்களில், எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது' என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உயர் நீதிமன்றத்தில், 'சீர்' என்ற தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்; அவர்களின் நல்வாழ்வுக்கான கொள்கையை அமல்படுத்த வேண்டும்' என்று கோரப்பட்டது.

இம்மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 'தமிழகம் முழுதும், மனநல பாதிப்பால் சாலையில் திரிபவர்களில், 396 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.

அறிக்கையை பரிசீலித்த முதல் பெஞ்ச், மீட்கப் பட்டவர் களில் ஒருவர் கூட சென்னையில் இல்லையா என்று கேள்வி எழுப்பியது. அதற்கு, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அதை சரிபார்த்து தெரிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து முதல் பெஞ்ச், 'மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சாலைகளில் திரிவதை பார்க்க முடிகிறது. அவர்களை மீட்டு, முகாம்களுக்கு கூட்டி சென்று தடுப்பூசி செலுத்தி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியது.

பின், மனநலம் பாதிக்கப்பட்டு எத்தனை பேர் சாலைகளில் திரிகின்றனர்; எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்யும்படியும், அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.துறை அதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, செயல் திட்டம் வகுக்கவும், முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது. விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X