பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' குளப்பணி எல்லாம் சரியா இருக்கா? டில்லி 'ஓயாசீஸ்' குழுவினர் ஆய்வு

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையில் குளங்களில் செய்து வரும் பணிகளை, டில்லியில் இருந்து வந்துள்ள 'ஓயாசீஸ்' குழுவினர் ஆய்வு செய்து, திருத்தங்கள் கூறியுள்ளனர். அவர்களிடம், கூடுதலாக என்னென்ன வசதிகள் செய்யலாம் என ஆலோசனை கோரப்பட்டுள்ளது.மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள குளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையில் குளங்களில் செய்து வரும் பணிகளை, டில்லியில் இருந்து வந்துள்ள 'ஓயாசீஸ்' குழுவினர் ஆய்வு செய்து, திருத்தங்கள் கூறியுள்ளனர். அவர்களிடம், கூடுதலாக என்னென்ன வசதிகள் செய்யலாம் என ஆலோசனை கோரப்பட்டுள்ளது.மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள குளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கான்கிரீட் கட்டுமானங்கள் அமைப்பது; நீர் தேக்கும் பரப்பை சுருக்குவது; கழிவு நீர் கலப்பது; ஆகாயத் தாமரை படர்வது; பல்லுயிர் பெருக்கச் சூழல் பாதிக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால், இயற்கை ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், கோவை மக்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கு தலமாகவும், நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் செல்வதற்கான இடமாகவும் அமையும் என்பதால், திட்ட பணிகளை, மாநகராட்சி தொடர்ந்து மேற்கொள்கிறது.இயற்கை ஆர்வலர்களின் குரலுக்கு செவிசாய்க்கும் வகையில், குளங்களை மேம்படுத்துவதற்கான வடிவமைப்பை, டில்லி 'ஓயாசீஸ்' நிறுவனத்தினர் தயாரித்துக் கொடுத்தனர். அக்குழுவினர் மீண்டும் கோவை வரவழைக்கப்பட்டு உள்ளனர்.உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் மற்றும் குறிச்சி குளத்தில் செய்து வரும் பணிகளை, அவர்கள் ஆய்வு செய்தனர். ஏற்கனவே தயாரித்துக் கொடுத்த வடிவமைப்புக்கும், தற்போது செய்யப்படும் பணியும் சரியாக இருக்கிறதா என ஒப்பிட்டு பார்த்தனர்.உக்கடம் பெரிய குளத்தின் மறுகரையில் செய்யப்படும் வேலைகளில் பல்வேறு திருத்தங்களை கூறியிருக்கின்றனர்.

வாலாங்குளத்தின் வடக்கு கரையில் காலியாக உள்ள இடங்களில், என்னென்ன வசதிகள் செய்யலாம் என ஆலோசனை கோரப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலிடம் கேட்டபோது, ''குளங்களில் செய்யும் பணிகள் தொடர்பான வடிவமைப்பை, 'ஓயாசீஸ்' நிறுவனத்தினர் தயாரித்துக் கொடுத்திருக்கின்றனர். அதன்படி, வேலை நடக்கிறதா என, அக்குழுவினர் ஆய்வு செய்கின்றனர்,'' என்றார்.
'ஸ்கேட்டிங்' தளம் எங்கே?வாலாங்குளம் ரயில்வே பாலத்துக்கு கீழே தண்டவாளத்துக்கு அருகே இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டன. அப்பகுதியில், சிறுவர்களுக்கான 'ஸ்கேட்டிங்' தளம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவ்வாறு உருவாக்காமல், சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றிய இடம் காலியாக இருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X