பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றம்; தடுக்க போலீஸ் விழிப்புணர்வு

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி சரகங்களுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில் நேற்று பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில்,

கோவை:குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி சரகங்களுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில் நேற்று பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குற்றங்களை தடுப்பது எப்படி, சி.சி.டிவி., கேமரா பொருத்துதல் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள், சாலை விதிகளை பின்பற்றுவது, மனஅழுத்தம், போதைபழக்க வழக்கங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதற்காக, கோவை மாவட்ட போலீசில் உருவாக்கப்பட்டுள்ள 'விடியல்' என்ற திட்டம் குறித்தும், போலீசாரை எவ்வாறு தொடர்பு கொண்டு கவுன்சிலிங் பெறலாம் என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இதற்காக போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல்போன் எண்களும் வழங்கப்பட்டன.போன் பண்ண தயங்காதீங்க!பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க, கோவை மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்- 94981 81212 மற்றும் வாட்ஸ்ஆப் எண்: 77081 00100 என்ற எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X