கட்டாயம் பட்டாசு வாங்கணும்: ஊழியர்களுக்கு நெருக்கடி

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், கூட்டுறவு சங்க ரேஷன் கடை பணியாளர்கள், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வாங்க நெருக்கடி கொடுத்து, விருப்ப படிவம் பெறப்படுவதாக, புகார் எழுந்திருக்கிறது.கோவை மாவட்டத்தில், 1,400க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்றன.இதில், கோயமுத்துார் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தினர், ஒவ்வொரு

கோவை:கோவையில், கூட்டுறவு சங்க ரேஷன் கடை பணியாளர்கள், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வாங்க நெருக்கடி கொடுத்து, விருப்ப படிவம் பெறப்படுவதாக, புகார் எழுந்திருக்கிறது.கோவை மாவட்டத்தில், 1,400க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்றன.இதில், கோயமுத்துார் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தினர், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது, சிவகாசியில் இருந்து மொத்தமாக பட்டாசு கொள்முதல் செய்து, ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் அளவையாளர்களை கட்டாயப்படுத்தி, விற்பனை செய்வது வழக்கமாக செய்து வருகின்றனர்.கடந்தாண்டு, 10 ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கச் சொல்லி, கட்டாயப்படுத்தப்பட்டனர். வரும் தீபாவளி பண்டிகைக்கு, 12 ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கச் சொல்வதாக, ரேஷன் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:எங்களது விருப்பத்தின் பேரில், பட்டாசு வாங்குவதாக, படிவம் பூர்த்தி செய்து பெறுகின்றனர். ஒவ்வொருவரும், 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க வற்புறுத்துகின்றனர். அதற்கான தொகை, 4 தவணையாக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என கூறியிருக்கின்றனர். சொந்த விருப்பம் என படிவத்தில் கூறி விட்டு, கட்டாயப்படுத்தி, அனைவரிடமும் கையெழுத்து பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இப்பிரச்னை நீடிக்கிறது.எங்களுக்கும், நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே சம்பள முரண்பாடு இருக்கிறது. எங்களுக்கு சம்பளம் குறைவு. அதில், 12 ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்க நிர்ப்பந்திக்கின்றனர்.இவ்வாறு, ரேஷன்கடை ஊழியர்கள் கூறினர்.இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரிடம் கேட்டபோது, 'பட்டாசு வாங்குவது கட்டாயமில்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X