கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொது இடங்களில் 'பேனர்' வைக்கும் நடவடிக்கைக்கு கண்டிப்பு!

Updated : அக் 06, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (9+ 15)
Share
Advertisement
சென்னை : 'போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக, பொது இடங்களில் 'பேனர்கள்', அலங்கார வளைவுகள் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; அதற்கான வழிமுறைகளை வகுத்து, அந்த விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் லிங்கெட்டி பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்ராஜ் என்பவர் தாக்கல்
பொது இடங்கள்,பேனர்,  நடவடிக்கை,  கண்டிப்பு,

சென்னை : 'போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக, பொது இடங்களில் 'பேனர்கள்', அலங்கார வளைவுகள் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; அதற்கான வழிமுறைகளை வகுத்து, அந்த விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் லிங்கெட்டி பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு: திருமண விழாவுக்கு வந்த அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் விதமாக, விழுப்புரத்தில் தி.மு.க.,வினர் சட்ட விரோதமாக பேனர்கள் வைத்தனர்; இரும்பு கம்பத்தில் தி.மு.க., கொடியை பறக்க விட்டிருந்தனர்.கொடிக் கம்பம் நிறுவும் பணியில் சிறுவன் தினேஷ் ஈடுபட்டிருந்தான். தாழ்ந்து தொங்கிக் கொண்டிருந்த மின் வயர் பட்டதில் தினேஷ் பலியானான்.



கொடிக் கம்பங்கள்


அமைச்சரை வரவேற்று, சட்ட விரோதமாக பேனர்கள், கொடிக் கம்பங்கள் ஏராளமாக வைக்கப்பட்டிருந்தன. இதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை. பேனர்கள், பதாகைகள், கொடிக் கம்பங்கள் வைப்பதற்கு முதலில் அனுமதி பெற வேண்டும்.எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் பொதுச் சாலைகள், நடைபாதைகளில் சட்ட விரோதமாக பேனர்கள், வளைவுகள், கொடிக் கம்பங்கள் வைப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தினேஷ் குடும்பத்துக்கு தகுந்த இழப்பீடு வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். அந்த தொகையை தி.மு.க.,விடம் இருந்து வசூலித்து கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.

விழுப்புரம் கலெக்டர் மோகன் தாக்கல் செய்த அறிக்கை:சிறுவன் மரணம் தொடர்பாக ஒப்பந்ததாரர் வெங்கடேஷன், ஆகஸ்ட் 24ல் கைது செய்யப்பட்டு, அக்., 2 வரை சிறையில் இருந்தார். விழுப்புரம் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது. பேனர்கள், விளம்பர 'போர்டு'களை அகற்றவும், எதிர்காலத்தில் இவற்றை நிறுவ அனுமதிக்க கூடாது என்றும், மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சட்ட விரோத பேனர்கள், கொடிக் கம்பங்கள், 'கட் - அவுட்'கள், விளம்பர போர்டுகளைத் தடுப்பதில் விழிப்புடன் இருக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறியிருந்தார்.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, சிறுவனின் குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும், கட்சித் தொண்டர்களை பேனர் வைக்கக் கூடாது என, முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும், மாவட்டங்களுக்கு சென்ற போது, ஏராளமான பேனர்களை பார்த்ததாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: சிறு சிறு நிகழ்ச்சிகளுக்கு கூட, நடைபாதைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சாலையின் ஒரு சில பகுதிகளில், அரசியல் தலைவர்களின் போஸ்டர்கள், கட் - அவுட்டுகள், அலங்கார வளைவுகள் மற்றும் தோரணங்கள் வைக்கப்படுகின்றன.



அரசியல் தலைவர்கள்


அரசியல் தலைவர்களை வரவேற்று, சாலைகளின் குறுக்கே வரவேற்பு வளைவுகள் அமைக்க தற்காலிக கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுஆபத்தானது.இத்தகைய நடைமுறைக்கு, ஆளும் கட்சியினருக்கு தடை விதித்திருப்பதாக, அட்வகேட் ஜெனரல் தெரிவித்தாலும், தற்காலிக கட்டுமானங்களை அனைத்து இடங்களிலும் பார்க்க முடிகிறது; நிகழ்ச்சி முடிந்தும் நீண்ட நாட்களுக்கு அவை அப்படியே உள்ளன.எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக இருக்கும் இந்த நடைமுறையை முற்றிலும் நிறுத்தவும், ஊக்கப்படுத்தாமல் இருக்கவும், அரசு தகுந்த நடவடிக்கைகளை குறிப்பிட வேண்டும்.பொது இடங்களில், தற்காலிக கட்டுமானங்களை மேற்கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் விதமாக, மாநில அரசு பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

இவ்வழக்கில், தமிழக அரசு மற்றும் தி.மு.க., தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர், 30க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (9+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
06-அக்-202123:47:07 IST Report Abuse
Raj அரசியல் கட்சிகள் நீதி மன்றத்திற்கு அப்பாற்பட்டது
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
06-அக்-202113:26:54 IST Report Abuse
venkatan ஜனநாயக மன்னர்களின் இம்சை சாம்ராஜ்யம்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-அக்-202108:05:23 IST Report Abuse
duruvasar பேனர் வைக்கம் செலவு செய்ய காசை எனக்கு கொடுத்துடுங்கன்னு , அப்பதான் நான் நிகழ்சிக்கு வருவேன்னு ராமசாமி நாயக்கன் வழியில் பணத்தை வாங்கி பையில் போட்டுக்குங்க. வுட்டுகார அம்மா இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை வாங்க செலவு செஞ்சிப்பாங்க. திராவிட சிந்தனையை முன்னெடுத்த நிறைவும் இடைக்கும். கிடைத்த பணத்தை நிர்வகிக்க ஒருவேரமணி கிடைக்காமலா போயிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X