பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்: 'அனுபவமே வெற்றிக்கான மைல்கல்'

Added : அக் 05, 2021
Share
Advertisement
முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.இவ்விழாவிற்கு, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமை வகித்து பேசினார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, புத்தகம் மற்றும் இனிப்புகளை மருதாசல அடிகளார் வழங்கினார்.விழாவில், கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,

முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.இவ்விழாவிற்கு, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமை வகித்து பேசினார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, புத்தகம் மற்றும் இனிப்புகளை மருதாசல அடிகளார் வழங்கினார்.
விழாவில், கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், "வாழ்க்கையில் ஏற்படும் அனுபவமே சிறந்த வெற்றிக்கான மைல்கல். வெற்றி என்பது, தேசமும் ஜெயிக்க வேண்டும். தனிமனிதனும் ஜெயிக்க வேண்டும்," என்றார்.விவசாயிகள் தர்ணா உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் மீது, துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி கூறுகையில், ''இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடும், குடும்பத்தினருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்,'' என்றார். வாழ்வாதாரத்தை காப்பாற்றணும்நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில், 'திருமணம், கோவில் திருவிழாக்களில் வாத்தியங்கள் இசைப்பது தான் முக்கிய வாழ்வாதாரம்.

கொரோனா காரணமாக வருமானம் முற்றிலும் முடங்கியது. அரசு உரிய நலத்திட்டங்கள் மூலம் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இசை கலைஞர்களுக்கு மாதந் தோறும் உதவித்தொகை, இலவச இசைக்கருவிகள், 58 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X