பொது செய்தி

தமிழ்நாடு

புத்தாக்க அறிவியல் விருது; 15 வரை விண்ணப்பிக்கலாம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:புத்தாக்க அறிவியல் ஆய்வு மானாக் விருதுக்கு விண்ணப்பிக்க, வரும் 15ம் தேதி கடைசி நாள்.பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆய்வுத்திறனை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், புத்தாக்க அறிவியல் ஆய்வு மானாக் விருது, ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.இவ்விருதுக்கு, அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள்

கோவை:புத்தாக்க அறிவியல் ஆய்வு மானாக் விருதுக்கு விண்ணப்பிக்க, வரும் 15ம் தேதி கடைசி நாள்.பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆய்வுத்திறனை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், புத்தாக்க அறிவியல் ஆய்வு மானாக் விருது, ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.இவ்விருதுக்கு, அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத, சூழலுக்கு ஏற்ற தலைப்பில், புதுமையான ஆய்வு கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்.இதில் சிறந்த செயல்திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதை செயல்வடிவமாக்க, 10 ஆயிரம் ரூபாய், உரிய மாணவரின் வங்கி கணக்கு எண்ணில் செலுத்தப்படும்.மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தி, சிறந்த படைப்புகளை தேர்வு செய்து, மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படும். தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் படைப்புகளுக்கு, விருது, ரொக்கப்பரிசு வழங்குவதோடு, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.இவ்விருதுக்கு, www.inspireawards-dst.gov.in என்ற இணையதள முகவரியில், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.கோவை மாவட்டத்தில் தற்போது வரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துருக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இறுதி கால அவகாசம் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ள மாணவர்களின் படைப்புகளை பதிவேற்றுமாறு, பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X