வேலை வாங்கி தருவதாக மோசடி: கமிஷனரிடம் நால்வர் புகார்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:ரேஷன் கடைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.கோவை, வெள்ளலுார், பட்டணம், கஞ்சிகோணாம்பாளையத்தை சேர்ந்த சரண்யா, பிரியதர்ஷினி, ராஜேந்திரன், கோபால்சாமி, காமராஜ் ஆகியோர் நேற்று காலை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.அந்த

கோவை:ரேஷன் கடைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.கோவை, வெள்ளலுார், பட்டணம், கஞ்சிகோணாம்பாளையத்தை சேர்ந்த சரண்யா, பிரியதர்ஷினி, ராஜேந்திரன், கோபால்சாமி, காமராஜ் ஆகியோர் நேற்று காலை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:வெள்ளலுார், மருதுார் பஸ் ஸ்டாப் அருகே மல்லிகா என்பவர், மல்லிகா சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் எங்கள் நான்கு பேரிடமும் கூட்டுறவுத்துறையால் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் வேலை வாங்கி தருவதாக, நான்கு பேரிடமும் இருந்து மொத்தம், 4 லட்சம் ரூபாய் பெற்றார்.பணம் வாங்கி ஒரு ஆண்டாகியும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, திருப்பி தர முடியாது என்றார். இதுகுறித்து விசாரித்தபோது, பலரிடம் இதேபோன்று வேலை வாங்கி தருவதாக சொல்லி லட்ச கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, எங்களில் இருவருக்கு செக் கொடுத்தார். ஆனால், வங்கி கணக்கில் பணம் இல்லை என்று அந்த செக் திரும்பியது. இதுதொடர்பாக தனியாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X