சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை தொந்தரவு செய்த வாலிபர் கைது

Added : அக் 05, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:ஆலாந்துறையில், கல்லூரி மாணவியை தொந்தரவு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தொண்டாமுத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவியும், ஆலாந்துறையை சேர்ந்த விவேக் குமார் என்பவரும் காதலித்து வந்தனர்.இவர்களின் காதலுக்கு, விவேக் குமாரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், கடந்த, 20 நாட்களுக்கு முன், விவேக் குமாருக்கு வேறு

தொண்டாமுத்தூர்:ஆலாந்துறையில், கல்லூரி மாணவியை தொந்தரவு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தொண்டாமுத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவியும், ஆலாந்துறையை சேர்ந்த விவேக் குமார் என்பவரும் காதலித்து வந்தனர்.இவர்களின் காதலுக்கு, விவேக் குமாரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், கடந்த, 20 நாட்களுக்கு முன், விவேக் குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.இதன்பின், கல்லூரி மாணவி செல்லும் இடங்களுக்கு விவேக் சென்று தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பஸ் ஸ்டாப்பில் கல்லூரி செல்வதற்காக நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை, விவேக் தொந்தரவு செய்துள்ளார்.இதுகுறித்து கல்லூரி மாணவியின் தந்தை, ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விவேக் குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X