பொது செய்தி

தமிழ்நாடு

சிவன்மலை, அவிநாசி, கருவலுார் கோவில்களுக்கு மத்திய அரசு சான்று

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:உயர்தர பிரசாதம் மற்றும் அன்னதானம் தயாரிக்கும், மூன்று கோவில்களுக்கு, மத்திய அரசின், 'போக்' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதான சமையல், உயர் தரமானது என, மத்திய அரசு சான்று வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.அதற்காக. 'இறைவனுக்கு பவித்ரமான பிரசாதம்' என்ற தலைப்பில், மத்திய குழுவினர் ஆய்வு செய்து, உணவு
 சிவன்மலை, அவிநாசி, கருவலுார்  கோவில்களுக்கு மத்திய அரசு சான்று

திருப்பூர்:உயர்தர பிரசாதம் மற்றும் அன்னதானம் தயாரிக்கும், மூன்று கோவில்களுக்கு, மத்திய அரசின், 'போக்' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதான சமையல், உயர் தரமானது என, மத்திய அரசு சான்று வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.அதற்காக. 'இறைவனுக்கு பவித்ரமான பிரசாதம்' என்ற தலைப்பில், மத்திய குழுவினர் ஆய்வு செய்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பரிந்துரையுடன் சான்றிதழ் வழங்கி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசியில் உள்ள, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், கருவலுார் மாரியம்மன் கோவில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில்களுக்கு, மத்திய அரசின், 'இறைவனுக்கு பவித்திரமான பிரசாதம்' என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் வினீத், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை ஆகியோர், கோவில் உதவி கமிஷனர் மற்றும் செயல் அலுவலரிடம், மத்திய குழுவின் சான்றிதழை வழங்கி, பாராட்டினர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜய லலிதாம்பிகை கூறியதாவது:கோவில்களில் தயாரிக்கப்படும் அன்னதான உணவு, இறைவனுக்கு படைக்கும் பிரசாதம் ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்து, மத்தியக்குழு சான்றிதழ் வழங்கி வருகிறது. இரண்டு கட்ட ஆய்வின் மூலம், குறைபாடுகள் நிவர்த்தி செய்து, சான்றிதழ் வழங்கப்படுகிறது.தற்போது, மூன்று கோவில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு கோவில்களில், இரண்டு கட்ட ஆய்வு முடிந்துள்ளது. மற்ற கோவில்களில், ஆய்வு நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.கோவில்களில் தயாரிக்கப்படும் அன்னதான உணவு, இறைவனுக்கு படைக்கும் பிரசாதம் ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்து, மத்தியக்குழு சான்றிதழ் வழங்கி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X