பொது செய்தி

தமிழ்நாடு

சாயமிடும் கட்டணம்,15 சதவீதம் உயர்வு; சாய ஆலை உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக, சாயமிடும் கட்டணத்தை, 15 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டுமென, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். தலைவராக காந்திராஜன், பொதுசெயலாளராக முருகசாமி, பொருளாளராக மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பொறுப்பேற்றுள்ளனர்.புதிய நிர்வாகிகள்,

திருப்பூர்:மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக, சாயமிடும் கட்டணத்தை, 15 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டுமென, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். தலைவராக காந்திராஜன், பொதுசெயலாளராக முருகசாமி, பொருளாளராக மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பொறுப்பேற்றுள்ளனர்.புதிய நிர்வாகிகள், நேற்று கூறியதாவது:இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில், திருப்பூர் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில், ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது. அதற்காக, 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, 1,070 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, 12 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளதால், தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர சாய ஆலைகளை பாதுகாக்க, ஜி.எஸ்.டி., வரியை, ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும்.சாயத்தொழிலை, டெக்ஸ்டைல் ஜாப்ஒர்க்காக வகைமாற்றம் செய்து, ஐந்து சதவீதம் மட்டும் ஜி.எஸ்.டி., வரி விதிக்க வேண்டும். நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்; இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். 'கெயில்' நிறுவனம் அமைக்கும் காஸ் வினியோக பணியை விரைவு படுத்த வேண்டும்.நிலக்கரி, கெமிக்கல், சாயம் விலை உயர்வால், சாயமிடும் கட்டணத்தை, 'பில்' கிடைத்ததும், பனியன் நிறுவனங்கள் வழங்கி உதவ வேண்டும். மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக, சாயக்கட்டணத்தை, 15 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X