தமிழ்நாடு

பருவமழை காலத்தில் பாயும் வெள்ளம்: நொய்யல் ஆற்றில் பெரும் புதர்க்காடு: வருமுன் காக்க...துார்வாரினால் பாதிப்பு எதுவும் இருக்காது

Updated : அக் 06, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:நொய்யல் ஆறு முறையாக துார் வாராமல் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், மழை பெய்யும் போது தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.திருப்பூர் நகரின் மையப்பகுதியாக நொய்யல் ஆறு நகரை கடந்து செல்கிறது. கோவையிலிருந்து பல கி.மீ., துாரம் பயணித்து வரும் நொய்யல் ஆறு, திருப்பூர் மாவட்டத்தில் சாமளாபுரம் பகுதியில் நுழைந்து மங்கலத்தை கடந்து திருப்பூர் நகரினுள்
 பருவமழை காலத்தில் பாயும் வெள்ளம்: நொய்யல் ஆற்றில் பெரும் புதர்க்காடு: வருமுன் காக்க...துார்வாரினால் பாதிப்பு எதுவும் இருக்காது

திருப்பூர்:நொய்யல் ஆறு முறையாக துார் வாராமல் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், மழை பெய்யும் போது தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.திருப்பூர் நகரின் மையப்பகுதியாக நொய்யல் ஆறு நகரை கடந்து செல்கிறது. கோவையிலிருந்து பல கி.மீ., துாரம் பயணித்து வரும் நொய்யல் ஆறு, திருப்பூர் மாவட்டத்தில் சாமளாபுரம் பகுதியில் நுழைந்து மங்கலத்தை கடந்து திருப்பூர் நகரினுள் நுழைந்து ஏறத்தாழ 10 கி.மீ., துாரம் பயணித்து செல்கிறது.

தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கும் நிலையில், நொய்யலில் அதிகளவிலான தண்ணீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றின் பெரும் பகுதி ஆகாய தாமரை, முட்செடிகள், புதர்கள் அதிகரித்தும் மற்றும் மண் மேடுகளாக காட்சியளிக்கிறது.பல மீட்டர் அகலம் கொண்ட நொய்யல் ஆற்றில் தற்போது கால்வாய் அளவு மட்டுமே மையப்பகுதியில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மீதமுள்ள பெரும்பாலான ஆற்றின் பகுதி இதுபோல் புதர்க்காடுகள் மண்டி காணப்படுகிறது.
அவசியமான பணி
இதனால், மழை பெய்யும் நாளில் ஆற்றில் தண்ணீர் செல்வது பெருமளவு தடுக்கப்படும்.
மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை நொய்யலுக்கு நீர் ஆதாரமாக உள்ள ஓடைகள் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், நொய்யல் ஆற்றில் துார் வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை.எனவே, நொய்யல் ஆற்றில் உள்ள இது போன்ற புதர் ஆக்கிரமிப்புகள் துார் வாரி சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் மழை வெள்ளம் வந்தால், தண்ணீர் தடையின்றி செல்ல ஏதுவாக இருக்கும். பாதிப்புகளும், சேதங்களும் தவிர்க்கப்படும்.

இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'நொய்யல் ஆற்றில் பல இடங்களில், ஆக்கிரமிப்பு உள்ளது. பாரபட்சமின்றி அவற்றை அகற்றி, துார்வார வேண்டும். அதேபோல, மழைக்காலங்களில், சாயக்கழிவு நீரை திறந்து விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.ஆற்றின் பெரும் பகுதி ஆகாய தாமரை, முட்செடிகள், புதர்கள் அதிகரித்தும் மற்றும் மண் மேடுகளாக காட்சியளிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-அக்-202121:36:22 IST Report Abuse
அப்புசாமி அடப்பாவிங்களா... குடி மராமத்து பண்ணி எல்லா நதிகளையும் தூர் வாருனதா வெட்டி நடை போட்டாரே... மாஜி முதல்வர்... அது இதுதானாடா? முதலில் உங்க சொத்துக்களை தூர் வாரணும்டா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X