பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு வசதி வாரியத்தின் பத்திரம் வழங்கும் முகாம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், பத்திரம் வழங்கும் முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பு பகுதியில், மனை வாங்கியவர்கள், தவணை முறையில், அதற்கான தொகையை செலுத்தி வருகின்றனர். மனைக்குரிய தொகையை செலுத்தி முடித்ததும், அவர்களுக்கு, மனைக்குரிய பத்திரம் வழங்கப்படுகிறது.கோவையில் உள்ள வீட்டுவசதி

திருப்பூர்:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், பத்திரம் வழங்கும் முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பு பகுதியில், மனை வாங்கியவர்கள், தவணை முறையில், அதற்கான தொகையை செலுத்தி வருகின்றனர். மனைக்குரிய தொகையை செலுத்தி முடித்ததும், அவர்களுக்கு, மனைக்குரிய பத்திரம் வழங்கப்படுகிறது.கோவையில் உள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில், மாதம் தோறும், கடைசி மூன்று நாட்கள் முகாம் நடக்கும். திருப்பூர் மாவட்ட மக்கள் வசதிக்காக, இங்கேயே முகாம் நடத்த வேண்டுமென, கலெக்டர் வினீத் அறிவுறுத்தியிருந்தார்.அதன்படி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்றும், இன்றும், பத்திரம் வழங்கும் முகாம் நடக்கிறது. வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் தியாகராஜ், செயற்பொறியாளர் எட்வின் சுந்தர் சிங், விற்பனை மற்றும் சேவை பிரிவு மேலாளர் அருண், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் மற்றும் உதவி பொறியாளர்கள் பங்கேற்றனர்.முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள, 8,302 மனைகளில், 1,910 மனைதாரர் பணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். புதுநகரில் உள்ள, 195 மனைகளில், 20 பேர் மட்டும் பாக்கி வைத்துள்ளனர். அவர்கள், பணம் செலுத்தி, பத்திரத்தை பெற்றுக்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X