பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அனுமதியில்லை: கலெக்டர் அறிவிப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:உடுமலை, திருமூர்த்தி மலை, ஸ்ரீஅமணலிங்கேஸ்வரர் கோவில், கொமரலிங்கம் சுற்று கோவில்களில், மஹாளய அமாவாசை அன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக, வழிபாட்டுதலங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் திருவிழா, சமூகம், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும், 31ம் தேதி வரை

திருப்பூர்:உடுமலை, திருமூர்த்தி மலை, ஸ்ரீஅமணலிங்கேஸ்வரர் கோவில், கொமரலிங்கம் சுற்று கோவில்களில், மஹாளய அமாவாசை அன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, வழிபாட்டுதலங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் திருவிழா, சமூகம், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும், 31ம் தேதி வரை தடை தொடர்வதால், மஹாளய அமாவாசையான இன்று, இரண்டு கோவில்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என, கலெக்டர் அறிவித்துள்ளார்.
அவ்வகையில், ஸ்ரீ அமணலிங்கேஸ்வரர் கோவில், கிழக்கு கொமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவில்களில், (சுத்துக்கோவில்), அமாவாசையான இன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை. வழக்கமான நித்யபடி பூஜைகள் மட்டும் நடக்கும். பக்தர்கள், தங்கள் வீடுகளிலேயே அமாவாசை வழிபாட்டை நடத்தி, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X