பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசி விபத்து நகராகிறதா?

Added : அக் 05, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசியில், தினசரி விபத்து நடப்பதால் வாசுன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சமடைந்துள்ளனர்.மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து நிறைந்த அவிநாசியில், கடந்த சில மாதமாக சாலை விபத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அவிநாசி - சேவூர் ரோடு, ஆட்டையம்பாளையம் முதல் கருவலூர் வரையிலான ரோட்டில், அதிகளவில் விபத்து நடக்கிறது; இதில், அதிகம் சிக்குவோர், டூவீலர் வாகன

அவிநாசி:அவிநாசியில், தினசரி விபத்து நடப்பதால் வாசுன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சமடைந்துள்ளனர்.மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து நிறைந்த அவிநாசியில், கடந்த சில மாதமாக சாலை விபத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அவிநாசி - சேவூர் ரோடு, ஆட்டையம்பாளையம் முதல் கருவலூர் வரையிலான ரோட்டில், அதிகளவில் விபத்து நடக்கிறது; இதில், அதிகம் சிக்குவோர், டூவீலர் வாகன ஓட்டிகள்தான்.விசாலமான ரோட்டில், அதிக வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், முன்னோக்கி செல்லும் வாகனங்களை 'ஓவர் டேக்' செய்ய முயற்சிக்கும் போதுதான், அதிகளவில் விபத்து நேரிடுகிறது. நேற்று முன்தினம் இரவு, சேவூரில் இருந்து அவிநாசி நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம், ஒரு டூவீலர் வாகன ஒட்டியை 'ஓவர் டேக்' செய்ய முயன்ற போது, அவ்வாகனம் மீது லேசாக உரசியுள்ளது.நிலைத்தடுமாறிய டிரைவர், வாகனத்தின் வேகத்தை குறைத்து, வலப்புறம் திருப்ப முயற்சித்த போது, எதிரே வந்த டூவீலரில் மோதி, ரோட்டில் கவிழ்ந்தது. சரக்கு வாகனத்தில் அமர்ந்திருந்த, 3 பேர் காயமடைந்தனர். இதில், பண்ணாரி, 35 என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இவ்வாறு, வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் தான், அதிகளவில் விபத்து நேரிடுகிறது.எனவே, அவிநாசி- சேவூர் ரோடு மற்றும் ஆட்டையம்பாளையம், கருவலூர் இடைப்பட்ட ரோட்டில் மையத்தடுப்பு வைக்க வேண்டும். அடிக்கடி விபத்து நடக்கும் ரோட்டில் 'பீக் அவர்ஸ்' எனப்படும் காலை, மாலை நோங்களில், போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.ஐவே, போலீசார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர், வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் என, அனைத்து துறையினரும் இவ்விவகாரத்தில் ஒன்றிணைந்து, விபத்து தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், ஆன்மிக நகர் என அறியப்படும், அவிநாசி' 'விபத்து நகரமாக மாறிவிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X