ஒரு போன் போதுமே... சுகாதார சீர்கேடு

Added : அக் 05, 2021
Share
Advertisement
பல்லடம் நகராட்சி, 13 வார்டு, சின்னிய கவுண்டர் வீதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடுமையான சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது.- எஸ்.அபி, பல்லடம்.மருத்துவர் அலட்சியம்பெருந்தொழுவு மெயின் ரோடு முத்தணம்பாளையம் பகுதியில் கால்நடைகளுக்காக அவசர சிகிச்சைக்கு அழைத்தால் மருத்துவர் உரிய நேரத்தில் வருவதில்லை. அவரின் அலட்சியப்போக்கால் பல
 ஒரு போன் போதுமே... சுகாதார சீர்கேடு

பல்லடம் நகராட்சி, 13 வார்டு, சின்னிய கவுண்டர் வீதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடுமையான சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது.- எஸ்.அபி, பல்லடம்.
மருத்துவர் அலட்சியம்

பெருந்தொழுவு மெயின் ரோடு முத்தணம்பாளையம் பகுதியில் கால்நடைகளுக்காக அவசர சிகிச்சைக்கு அழைத்தால் மருத்துவர் உரிய நேரத்தில் வருவதில்லை. அவரின் அலட்சியப்போக்கால் பல கால்நடைகள் இறந்து விட்டன.- நாகலட்சுமி, முத்தணம்பாளையம்.
போக்குவரத்து நெரிசல்
அனுப்பர்பாளையம், பஸ் ஸ்டாப் முதல் வேலம்பாளையம் செல்லும் வழி போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.- ஆர்.சதீஸ்வரன், அனுப்பர்பாளையம்.

பாதுகாப்பில்லை

அவிநாசி, வ.உ.சி., காலனி ராயர் வீதி செல்லும் வழியில் மரம் பட்டுபோன நிலையில் ஆண்டுக்கணக்கில் உள்ளது. மழைக்காலம் என்பதால் பாதுகாப்பில்லை. அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஏ.புஷ்பநாதன், அவிநாசி.

நாய்த்தொல்லை

தாராபுரம் ரோடு, சந்திராபுரம், பண்ணாரி அம்மன் நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டன. ரோட்டில் யாரும் நடந்துசெல்ல முடிவதில்லை. கட்டுப்படுத்த வேண்டும்.- ஆர்.மருதாசலம், சந்திாரபுரம்.கடும் துர்நாற்றம்நல்லுார், காசிபாளையம், 34வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாய் சரிவர துார்வாரப்படுவதில்லை. துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை.- எஸ்.கோபி, நல்லுார்.ஒலி மாசுபாடுகருவம்பாளையம், ஆலாங்காடு பகுதியில் அதிகாலையிலே தள்ளுவண்டி வியாபாரிகள் அனுமதி பெறாமல் ஒலிப்பெருக்கி கொண்டு கூவிக்கூவி வியாபாரம் செய்கின்றனர். அதிக சத்தம் எழுப்புவதால், பொதுமக் களுக்கு அசவுகரியமாக இருக்கிறது.- ராஜகோபால், ஆலாங்காடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X