பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு 15 டன் இனிப்புகள் விற்பனை செய்ய ஆவின் திட்டம்

Added : அக் 05, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:தீபாவளி பண்டிகையை ஒட்டி, 15 டன் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்ய, ஆவின் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.மாநிலம் முழுதும் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தினமும், 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 26 லட்சம் லிட்டர் பலவகை பால்களாக தரம் பிரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.மீதமுள்ள பாலில், நெய், பால் பவுடர், வெண்ணைய், குலோப்

சென்னை:தீபாவளி பண்டிகையை ஒட்டி, 15 டன் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்ய, ஆவின் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

மாநிலம் முழுதும் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தினமும், 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 26 லட்சம் லிட்டர் பலவகை பால்களாக தரம் பிரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.மீதமுள்ள பாலில், நெய், பால் பவுடர், வெண்ணைய், குலோப் ஜாமூன், ரசகுல்லா, பால்கோவா, மைசூர்பா, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து விற்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை நேரத்தில் ஆவின் வாயிலாக, 10 டன் வரை இனிப்புகள் தயாரித்து சிறப்பு விற்பனை செய்யப்படும்.இந்தாண்டு தீபாவளிக்கு15 லட்சம் டன் இனிப்புகள் தயாரித்து விற்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் பிரத்யேக இனிப்புகளுடன், பல புதிய இனிப்பு வகைகளை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இனிப்பு மற்றும் காரவகைகள் அடங்கிய காம்போ பொருட்களும் விற்கப்பட உள்ளன.இந்த இனிப்புகளை, ஆவின் நிறுவன பார்லர்களில் மட்டுமின்றி, வணிக வளாகங்களில் விற்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் பால்வளத் துறை செயலர் ஜவஹர், ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
06-அக்-202119:16:43 IST Report Abuse
John Miller ராஜேந்திர பாலாஜியிடம் ஒன்னரை டன் ஸ்வீட விற்பனை செய்ய முடியும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-அக்-202117:21:04 IST Report Abuse
Bhaskaran ஆவின் மைசூர்பாமற்றும் பால்கோவா மிகவும் நன்றாக இருக்கும் இப்போ கலப்படம் அதிகம் ஆகிவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X