பொது செய்தி

தமிழ்நாடு

வீடு, வீடாக ஓட்டு வேட்டை

Added : அக் 05, 2021
Share
Advertisement
அவிநாசி:கருவலுார் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் களத்தில், ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கருவலுார் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல், 9ல் நடக்கிறது. 5,200 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். தி.மு.க.. ஆதரவில், ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த முருகன், களம் காண்கிறார்.அ.தி.மு.க.,

அவிநாசி:கருவலுார் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் களத்தில், ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கருவலுார் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல், 9ல் நடக்கிறது. 5,200 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். தி.மு.க.. ஆதரவில், ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த முருகன், களம் காண்கிறார்.அ.தி.மு.க., ஆதரவில், கடந்த முறை தேர்தலில், தோல்வியடைந்த முருகேசன் மீண்டும் போட்டியிடுகிறார்.

இவர்கள் தவிர, ரங்கசாமி, அரவிந்தசாமி ஆகியோரும் களத்தில் உள்ளனர்.ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.,வுக்கு, கருவலுார் தேர்தல் கவுரவப்பிரச்னை என்பதால், தங்களது வேட்பாளரை கரை சேர்ப்பதில், அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த முறை அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், 'அந்த பெருமையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்' என்பதில், அ.தி.மு.க. வினர் தங்களது வேட்பாளரின் வெற்றிக்காக வீடு, வீடாக ஒட்டு சேகரித்து வருகின்றனர்.பணம் புழங்கும்?கருவலுாரை பொருத்தவரை பல அரசியல் கட்சிகள் இருந்தாலும், 'அனுசரித்து' போகும் நிலைபாடு உண்டு. அந்த வகையில், அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் களமிறங்கும் வேட்பாளர்களை இயக்கப் போவதும், அந்தந்த கட்சிகளின் உள்ளூர் வி.ஐ.பி.க்கள் தான்.அவர்களை தாண்டி, சுயே., வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், தங்களின் அதிகார வரம்புக்குள் அவர்களை கொண்டு வர, உள்ளூர் வி.ஐ.பி.,க்கள் காய் நகர்த்துவர். வாக்காளர்களின் ஓட்டுகளை அறுவடை செய்ய, கடைசி நேரத்தில், பணம் பட்டுவாடா செய்வதற்கான வியூகத்தையும், அரசியல் கட்சியினர் வகுத்து வைத்துள்ளதும், 'அஜென்டாவில்' உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X