போராட்டம்: அண்ணாமலை அழைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

போராட்டம்: அண்ணாமலை அழைப்பு

Added : அக் 05, 2021
Share
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கை: அனைத்து நாட்களிலும் கோவில்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பா.ஜ., தலைவர்கள், நிர்வாகிகள், புகழ்பெற்ற கோவில்கள் முன் நாளை போராட்டம் நடத்த உள்ளனர்.தொடர்ந்து பலமுறை இக்கருத்தை வலியுறுத்தியும், இரு செவியும் மந்தமாய், கேளாத அந்தமாய் தி.மு.க., அரசு இருப்பதால், இந்த அறப்போராட்டம் நடத்துவதை

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கை: அனைத்து நாட்களிலும் கோவில்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பா.ஜ., தலைவர்கள், நிர்வாகிகள், புகழ்பெற்ற கோவில்கள் முன் நாளை போராட்டம் நடத்த உள்ளனர்.
தொடர்ந்து பலமுறை இக்கருத்தை வலியுறுத்தியும், இரு செவியும் மந்தமாய், கேளாத அந்தமாய் தி.மு.க., அரசு இருப்பதால், இந்த அறப்போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. தமிழகத்தின் 12 புகழ்பெற்ற கோவில்கள் முன், மக்களுக்கான இந்த போராட்டம் நடக்கும் போது, அனைவரும் பங்கேற்க அழைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X