பொது செய்தி

தமிழ்நாடு

சிக்கண்ணா கல்லுாரியில் இறுதி கட்ட கலந்தாய்வு

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளநிலை வகுப்புக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது.வணிகவியல் பாடப்பிரிவுகள், பொருளியல், வரலாறு, தமிழ், இலக்கியம், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளில் கூடுதலாக பெறப்பட்ட இடங்களில் சில இடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக்காதவர்களும் இதுவரை கலந்தாய்வில்

திருப்பூர்:சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளநிலை வகுப்புக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது.வணிகவியல் பாடப்பிரிவுகள், பொருளியல், வரலாறு, தமிழ், இலக்கியம், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளில் கூடுதலாக பெறப்பட்ட இடங்களில் சில இடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக்காதவர்களும் இதுவரை கலந்தாய்வில் பங்கேற்காதவர்களும் வரலாம்.அறிவியல் பாடப்பிரிவுகளில் குறிப்பாக கணிதம் பயின்றவர்கள் விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும் இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் பங்குபெறலாம். பிளஸ் 2 சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் இரண்டு நகல்கள் மற்றும், ஆறு பாஸ்போர்ட் அளவு போட்டோ கொண்டு வர வேண்டும்.அனைத்து அசல் சான்றிதழ்களுடன், கல்லுாரிக்கு செலுத்த வேண்டிய தொகையுடன் பெற்றோர் உடன் வருதல் வேண்டும் என, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X