பொது செய்தி

தமிழ்நாடு

நினைவலைகளில் மூழ்கிய முன்னாள் மாணவர் சந்திப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில், 32 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக பயின்ற முன்னாள் மாணவர்கள் கல்லுாரியில் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் கடந்த 1984 முதல் 1987 ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், அந்த கால கட்டத்தில் படித்த 55 பேர்
 நினைவலைகளில் மூழ்கிய  முன்னாள் மாணவர் சந்திப்பு

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில், 32 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக பயின்ற முன்னாள் மாணவர்கள் கல்லுாரியில் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் கடந்த 1984 முதல் 1987 ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், அந்த கால கட்டத்தில் படித்த 55 பேர் பங்கேற்றனர்.கல்லுாரியில், 32 ஆண்டுகளுக்கு முன் படித்தபோதும், அதன் பின்னர் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், குடும்பம், தொழில், வேலை, உறவுகள், நட்புகள் குறித்தும் தங்கள் நினைவுகளையும், நிகழ்வுகளையும் பகிர்ந்து மகிழ்ந்தனர்.இந்த சந்திப்பின் போது, தாங்கள் படித்த கல்லுாரிக்கு தேவையான வசதிகளை செய்து தருவது என ஆலோசனை நடத்தி, கல்லுாரி நிர்வாகத்தில் உரிய அனுமதி பெற்று கல்லுாரி தேவைகளை பூர்த்தி செய்ய தங்கள் பங்களிப்பை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் வேதா யுவராஜ் மற்றும் முகுந்தன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 பொறுப்பாளர் மோகன்குமார் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X