உப்பு மாதிரி எடுத்து பகுப்பாய்வு நடத்த வேண்டும்! உணவு பாதுகாப்புத்துறைக்கு கலெக்டர் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உப்பு மாதிரி எடுத்து பகுப்பாய்வு நடத்த வேண்டும்! உணவு பாதுகாப்புத்துறைக்கு கலெக்டர் உத்தரவு

Added : அக் 05, 2021
Share
திருப்பூர்:சாக்குமூட்டைகள் மற்றும் 'லேபிள்' இல்லாமல் விற்கப்படும் உப்பு மாதிரியை எடுத்து, பகுப்பாய்வு நடத்த, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.உணவு பாதுகாப்புத்துறை சார்பில், மூன்றாவது காலாண்டுக்கான, மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு

திருப்பூர்:சாக்குமூட்டைகள் மற்றும் 'லேபிள்' இல்லாமல் விற்கப்படும் உப்பு மாதிரியை எடுத்து, பகுப்பாய்வு நடத்த, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.உணவு பாதுகாப்புத்துறை சார்பில், மூன்றாவது காலாண்டுக்கான, மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.கலெக்டர் பேசியதாவது:உணவகங்கள், உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும். அனைத்து வணிகர்களும், 2022 ஜன., முதல், நுகர்வோருக்கு வழங்கும் விற்பனை ரசீதில், உணவு பாதுகாப்பு துறை சான்று அவசியம் என அச்சிடப்பட வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில் பயன்படுத்தி எண்ணெய், ஓட்டல்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது. 'பயோடீசல்' தயாரிக்க வசதியாக, ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு, கொள்முதல் செய்யப்படுகிறது.சான்று பெறலாம்!திருமண மண்டபம், ஓட்டல்களில் மீதமாகும் உணவை, ஏழை, எளிய மக்களுக்கு வழங்க, தன்னார்வ அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை தேர்வு செய்யும் ஓட்டல்கள், சுகாதார குறியீடு சான்று பெற முயற்சிக்க வேண்டும்.உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்புத்துறை பயிற்சி பெற்று, விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். நுகர்வோர் அமைப்புகளை அழைத்து, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.மக்களுக்கு, அயோடின் கலந்த உப்பு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்; சாக்கு மூட்டைகளில் வைத்து விற்கப்படும் உப்பு, சரியான லேபிள் இல்லாத உப்பு பாக்கெட்டுகளை எடுத்து, பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும்.உணவக பணியாளர் அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர் பார்வைக்கு தெரியும் வகையில், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்.உணவு கலப்படம் தொடர்பான புகார்களை, 94440 42322 என்ற எண்களில் புகார் செய்யலாம்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X