சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருப்போரூர் : மேலக்கோட்டையூரில் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., ஒருவர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்தார்.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., கவுதம் 59. இவருக்கு மனைவி, 27, மற்றும் 16 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.கவுதம், அமைச்சர், நீதிபதி போன்றவர்களுக்கு பாதுகாப்பு
 பாதுகாப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

திருப்போரூர் : மேலக்கோட்டையூரில் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., ஒருவர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., கவுதம் 59. இவருக்கு மனைவி, 27, மற்றும் 16 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.கவுதம், அமைச்சர், நீதிபதி போன்றவர்களுக்கு பாதுகாப்பு பிரிவு பணியில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களாக சென்னையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் நேற்று காலை 8:15 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்த கவுதம், தன் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு, தற்கொலை செய்துகொண்டார்.தகவல் கிடைத்ததும் தாழம்பூர் போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.செங்கல்பட்டு எஸ்.பி., விஜயகுமார், மாமல்லபுரம் டி.எஸ்.பி., ஜெகதீஸ்வரன் ஆகியோரும் விசாரணை நடத்தினர்.கவுதம் தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன், குறிப்போ, கடிதமோ எதுவும் எழுதி வைக்கப்படவில்லை.முதற்கட்ட விசாரணைக்கு பின், போலீசார் கூறியதாவது:கவுதமின் இரு மகன்களுக்கும் ரத்தம் உறைதல் சம்பந்தமான நோய் உள்ளது.

இது சம்பந்தமான மருத்துவ சிகிச்சைக்காக, வருவாயை தாண்டி அதிக கடன் வாங்கியுள்ளார். தவிர இன்னும் ஓராண்டு மட்டுமே அவருக்கு பணி காலம்.கடன் பிரச்னை, மகன்களின் சிகிச்சை இதற்கிடையில் பணிக்கு செல்லுதல் போன்றவற்றால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X