கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உயிருடன் புலியை பிடிக்க முயற்சி: ஐகோர்ட்டில் அரசு பிளீடர் தகவல்

Updated : அக் 07, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை, அக். 6- நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் உலவும் புலியை, உயிருடன் பிடிக்க முயற்சி செய்வதாகவும், கொல்லும் திட்டம் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கால்நடைகளுக்கான நல அமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னா தாக்கல் செய்த மனு:தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள வழிமுறைகளை, முதன்மை தலைமை வன பாதுகாவலர் பின்பற்ற
 புலி, முயற்சி ஐகோர்ட்,அரசு பிளீடர் தகவல்

சென்னை, அக். 6- நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் உலவும் புலியை, உயிருடன் பிடிக்க முயற்சி செய்வதாகவும், கொல்லும் திட்டம் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கால்நடைகளுக்கான நல அமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னா தாக்கல் செய்த மனு:தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள வழிமுறைகளை, முதன்மை தலைமை வன பாதுகாவலர் பின்பற்ற வேண்டும். புலியை வேட்டையாட, கொல்ல உத்தரவிடும் முன், ஆணையத்தின் வழிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும்.உயிருக்கு ஆபத்தாக மாறும் போது, அந்த விலங்குகளை வேட்டையாட, முதன்மை தலைமை வன பாதுகாவலர் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது. அத்தகைய உத்தரவை, ஆணையத்தின் வழிமுறைகளுக்கு உட்பட்டே பிறப்பிக்க முடியும்.

நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் உலவும் புலி, கால்நடைகளை கொன்றிருப்பதாகவும், சந்திரன் என்பவர் பலியாகி இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், பிடிக்கவும் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, புலியை பிடிப்பதில் சிரமம் இருப்பதால், அதை வேட்டையாட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த உத்தரவை சட்டப்படி ஏற்க முடியாது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிமுறைகளை மீறுவதாக உள்ளது. எனவே, புலியை வேட்டையாடக் கூடாது; கொல்லக் கூடாது; உயிருடன் பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் யோகேஸ்வரன் வாதாடினார்.அரசு தரப்பில், அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, ''புலியை உயிருடன் பிடிக்கத் தான் முயற்சி எடுக்கப்படுகிறது. அதை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை,'' என்றார்.
இதையடுத்து, முதல் பெஞ்ச், 'புலியை கொல்ல வேண்டாம். அது, ஆள்கொல்லியாக இல்லாமல் கூட இருக்கலாம். அதனால், உடனடியாக கொல்ல முயற்சிக்க வேண்டாம்' என அறிவுறுத்தியது.பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'புலியை பிடிக்கும் நடவடிக்கையில், மற்ற விலங்கு களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வனத்தில் சுதந்திரமாக நடமாட, விலங்குகளுக்கு உரிமை உள்ளது' எனக் கூறியுள்ளது.புலியை பிடிக்கும் நடவடிக்கை குறித்து, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Oru Indiyan - Chennai,இந்தியா
06-அக்-202107:32:40 IST Report Abuse
Oru Indiyan தினமும் கோடிக்கணக்கான கோழிகலை கொல்றாய்ங்க, கோடிக்கணக்கான ஆடுகளை கொன்று பிரியாணி வைக்கிறாய்ங்க. லட்சக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டு சமைக்கிறாய்ங்க ஒரு புலிக்கு அதுவும் மனிதர்களை கொன்று குவிக்கும் புலிக்கு இதனை சப்போர்ட் ஆ. இது நல்லது இல்லே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X