தடுப்பூசி ஒன்றே பேராயுதம்! இன்று முகாம் நடக்குமிடங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி ஒன்றே பேராயுதம்! இன்று முகாம் நடக்குமிடங்கள்

Added : அக் 05, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி நகர் நல மையம், மருத்துவ கல்லுாரி உள்ளிட்ட பொது இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது.இதுவரை தடுப்பூசி செலுத்தாத, 18 வயதை கடந்தவர், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.மாநகராட்சி முதல் மண்டலத்தில் சிறுபூலுவப்பட்டி, இரண்டாவது மண்டலத்தில், ஜெ.ஜெ., நகர், மூன்றாவது மற்றும் நான்காவது மண்டலம் முறையே

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி நகர் நல மையம், மருத்துவ கல்லுாரி உள்ளிட்ட பொது இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது.இதுவரை தடுப்பூசி செலுத்தாத, 18 வயதை கடந்தவர், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாநகராட்சி முதல் மண்டலத்தில் சிறுபூலுவப்பட்டி, இரண்டாவது மண்டலத்தில், ஜெ.ஜெ., நகர், மூன்றாவது மற்றும் நான்காவது மண்டலம் முறையே கருமாரம்பாளையம் ஏ.டி., காலனி, கரைத்தோட்டத்தில் தலா, 250 வீதம், ஆயிரம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.அண்ணா நெசவாளர் காலனி, குருவாயூரப்பன் நகர், கோவில்வழி, புதுராமகிருஷ்ணாபுரம், மேட்டுப்பாளையம், நெருப்பெரிச்சல், நெசவாளர் காலனி, பி.ஆர்.எம்., பங்களா ஸ்டாப், பெரியாண்டிபாளையம், சூசையாபுரம், சுண்டமேடு, மண்ணரை.டி.எஸ்.கே., காலனி, தென்னம்பாளையம் (கே.வி.ஆர்., காலனி), வீரபாண்டி, 15 வேலம்பாளையம் மற்றும் நல்லுார் ஆகிய, 17 ஆரம்ப சுகாதார நிலையத்தில், தலா, 600 வீதம், 10 ஆயிரத்து, 200 கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

திருப்பூர் மருத்துவ கல்லுாரியில், 500 கோவிஷீல்டு, தாராபுரம், உடுமலை, அவிநாசி அரசு மருத்துவமனையில் தலா, 200, பல்லடம், காங்கயம், ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் தலா, 100, ஜல்லிப்பட்டி, மடத்துக்குளத்தில் தலா, 1,350 என தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது.எம்.எல்.ஏ., அலுவலகம்திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்டில் தலா, 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகர்நல மையம் மட்டுமின்றி, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இங்கு, 200 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X